Bangladesh Protests : நாட்டை விட்டு ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் நடக்கும் பிரச்னை என்ன? ஏன் தொடர் கலவரம்? - Tamil News | Bangladesh student protest getting worse prime minister resigned and moved out of the country | TV9 Tamil

Bangladesh Protests : நாட்டை விட்டு ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் நடக்கும் பிரச்னை என்ன? ஏன் தொடர் கலவரம்?

Published: 

05 Aug 2024 18:02 PM

Bangladesh | வங்க தேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதில் இதுவரை சுமார் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வங்க தேசத்தின் தலைநகர் டாங்காவில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Bangladesh Protests : நாட்டை விட்டு ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் நடக்கும் பிரச்னை என்ன? ஏன் தொடர் கலவரம்?

வங்கதேச பிரதமர்

Follow Us On

வங்கதேச போராட்டம் : வங்க தேசத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாப்புகளில் பாதிக்கும் அதிகமான இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் அங்கு மீண்டு போராட்டம் வெடித்துள்ளது. வங்கதேசத்தின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அந்த நாட்டை விட்டே வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த மாணவர்கள் போராட்டம்

வங்க தேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதில் இதுவரை சுமார் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வங்க தேசத்தின் தலைநகர் டாங்காவில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காளிகள், மேசைகள் எடுத்துச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இத்தகைய அசாதாரன சூழலில் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினிமா செய்துள்ள நிலையில், அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : US Presidential Election: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம்.. தேதி குறித்த டிரம்ப்!

பொதுமக்களிடம் உரையாற்றிய ராணுவ தளபதி

இது குறித்து மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான், வங்க தேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வங்க தேச கலவரம் குறித்து குடியுரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இதுகுறித்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவரிடம் அவர் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கதேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீடி கிடைக்க செய்ய ராணுவ தளபதி உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bangladesh Riots: மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.. 100 பேர் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

இந்நிலையில் வங்க தேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு யார் பொறுப்பேற்பார் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version