5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bangladesh Protest : தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்.. 105 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. தொடரும் பதற்றம்!

Bangladesh Protest Issue | வங்க தேசத்தில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இட ஒதுக்கீடு காரணமாக அங்கு வெடித்துள்ள போராட்டத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

Bangladesh Protest : தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்.. 105 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. தொடரும் பதற்றம்!
போராட்டம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Jul 2024 14:18 PM

வங்க தேச போராட்டம் : வங்க தேசத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாப்புகளில் பாதிக்கும் அதிகமான இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இட ஒதுக்கீடு காரணமாக அங்கு வெடித்துள்ள போராட்டத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தீவிரமடைந்த போராட்டம்

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கடந்த ஜுலை 18 ஆம் தேதி, அரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தீ வைத்து கொலுத்தியதை தொடர்ந்து அங்கு போராட்டம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாங்காவிற்கு வந்து செல்லும் மெட்ரோ ரயில் சேவையை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

அரசின் இணைய சேவைகளை ஹேக் செய்த ஹேக்கர்கள்

வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிரதமர் அலுவலகம், காவல் அலுவலக இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டன. அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களில் ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொல்வதை நிறுத்து என்றும் இனி இது போராட்டம் இல்லை இது போர் என்ற எழுத்துக்கள் தெரிந்ததால் அது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் காரணமாக இந்த இணையதளங்கள் மாணவர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இன்ஸ்டா வலை.. ரசிகர்களை அடிமையாக்கி பாலியல் தொழில்.. பிரபல மாடல் கைது.. ஷாக் சம்பவம்!

அதுமட்டுமன்றி வங்க தேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தின் சிறைச்சாலையை முற்றுகையிட்ட மாணவர்கள் சிறை கைதிகளை விடுவித்து, பிறகு சிறைசாலைகளுக்கு தீ வைத்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட சிறை கைதிகளை மாணவர்கள் விடுவித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிகின்றன.

இந்தியா திரும்பும் மாணவர்கள்

இந்நிலையில் வங்க தேசத்திற்கு படிக்க சென்ற 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வங்க தேசம் போராட்ட கலமாக உள்ளதால், அவர்கள் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய எல்லை வழியாக அழைத்துவர படுகின்றனர். இந்த மாணவர்கள் பெரும்பாலும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : Influencer Died : ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

Latest News