பாலியல் தொழிலாளிகளுக்கு பென்ஷன்.. மகப்பேறு விடுப்பு.. அதிரடி சட்டம் அமல்!
Belgium grants maternity leave: பாலியல் தொழிலாளிகளுக்கு பென்ஷன் மற்றும் மகப்பேறு விடுப்பு அளிக்கும் மகத்தான சட்டம் பெல்ஜியத்தில் இயற்றப்பட்டுள்ளது. இது, பாலியல் தொழிலாளிகளின் நலன் காக்கும் உலகின் முதல் சட்டமாக பார்க்கப்படுகிறது.
பாலியல் தொழிலாளிகளுக்கு மகப்பேறு விடுப்பு: மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், உடல்நலக் காப்பீடு மற்றும் நோய்வாய் விடுப்பு (சிக் லீவ்) உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சலுகைகள் பெல்ஜியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளை, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் பெல்ஜியம் வழங்கியுள்ளது. பெல்ஜியத்தின் இந்த அங்கீகாரம் உலகிலேயே முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முக்கிய சட்டம், மற்ற தொழில்களைப் போலவே பாலியல் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்கிறது.
பாலியல் தொழிலுக்கு வந்தது ஏன்?
இந்தச் சட்டம் குறித்து பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் பாலியல் தொழிலாளி ஒருவர், “எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக இந்தத் தொழிலுக்கு வந்தேன். தற்போது நானும் சக மனுஷியாக உணர்கிறேன்” என்றார்.
இந்தச் சட்டம் மனித உரிமை ஆர்வலர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை பெல்ஜியம் பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் விக்டோரியா வரவேற்றுள்ளார்.
இதையும் படிங்க : அதீத மதுபோதை.. ராணுவ ஹெலிகாப்டரில் கசமுசா.. இரு அதிகாரிகள் கைது!
பாலியல் தொழிலாளிகள் வன்புணர்வு
இது குறித்த அவர், “பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை திர்கொள்கின்றனர். வாடிக்கையாளர்களால் நாங்கள் வன்புணர்வு செய்யப்பட்டாலும் புகார் அளிக்க முடியாது. காவலர்கள் எங்களது புகாரை வாங்க மறுக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு நானும் இதுபோல் பாதிக்கப்பட்டேன். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது?
பெல்ஜியத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் முதலாளிகளை ஒழுங்குபடுத்துகிறது, குற்றப் பதிவுகள் உள்ளவர்களைத் தடை செய்கிறது. மேலும், பணியிடங்களில் எச்சரிக்கை பொத்தான்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்கிறது.
தொடர்ந்து, சட்டப்பூர்வ மசாஜ் பார்லரை நடத்தும் தொழிலாளிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இது குறித்து பேசிய மஜாஜ் பார்லர் பெண் ஒருவர், “நேர்மையற்ற முதலாளிகள் தங்களின் பார்லர்களை இந்தச் சட்டத்தால் மூடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க : Ven Ajahn Siripanyo: ரூ.45 ஆயிரம் கோடி சொத்து வேண்டாம்.. துறவியாக வாழும் மலேசிய தொழிலதிபர் மகன்!