5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Israel Hezbollah Conflict: ”பெரிய தவறு பண்ணிட்டீங்க” ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்… கண்டித்த இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து டிரான் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக கண்டித்துள்ளார். அதாவது, மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு செய்ய முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

Israel Hezbollah Conflict: ”பெரிய தவறு பண்ணிட்டீங்க” ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்… கண்டித்த இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல் பிரதமர் (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Oct 2024 07:16 AM

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து டிரான் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக கண்டித்துள்ளார். அதாவது, மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு செய்ய முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுப்படுகிறது. அவரது வீடு இஸ்ரேல் வடக்கு பகுதியில் உள்ள சீசரா என்ற பகுதியில் உள்ளது.

”பெரிய தவறு பண்ணிட்டீங்க”

இந்த வீட்டை நோக்கி நேற்று லெபானனில் இருக்கு டிரான் ஏவப்பட்டுள்ளது. இது அந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து வெடித்துள்ளது. மேலும் 2 டிரோன்களை இடைமறித்த அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் ஹில்புல்லா அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும், அதற்கு ஹில்புல்லா அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி, ” என்னையும், எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.

Also Read: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!

இப்படி செய்வதால் என்னையும் இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் எதிர்களுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்காது. நான் ஈரானுக்கும் ஒன்று சொல்லுகிறேன். இஸ்ரேன் மளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும். மக்களை துன்புறுத்தினால் யாராக இருந்தாலும் ஒழிப்போம்.

 

எங்கள் பணயக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம். மேலும் நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம். போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

அடுத்தடுத்த தளபதிகள் கொலை:

எதிர்கால தலைமுறைகளுக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரத்தை மாற்ற வேண்டும். ஒன்றிணைந்து போராடுவோம்”  என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான  போரைத் தொடர்ந்து  ஹமாஸ்க்கு ஆதரவாக லெபானில்  செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா,   துணைத் தலைவர் நபீல்  கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது.

ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 3ஆம்  தேதி ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியது.

இதற்கு பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்படியான சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர்  யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

Also Read: ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேல்.. யார் இந்த யாஹ்யா சின்வார்?

இவர் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவரை நீண்ட நாட்களாக கொலை செய்ய திட்டமிட்டு வந்த இஸ்ரேல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வான்வழி தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதனால் இஸ்ரேலுக்கு ஈரான் போர் சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் ஈரான் இடையே நேரடி போர் வெடித்தால் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News