X Platform: பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கம்.. கடுப்பான எலான் மஸ்க்.. என்ன நடந்தது?
2022 ஆம் ஆண்டு அந்த நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது லூலா டா சில்வா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லூலா டா சில்வா பதவியேற்க, போல்சனாரே சதி நடத்தினாரா என்ற கோணத்தில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கம்: பிரேசிலில் எக்ஸ் தளத்தை முடக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அந்த நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது லூலா டா சில்வா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லூலா டா சில்வா பதவியேற்க, போல்சனாரே சதி நடத்தினாரா என்ற கோணத்தில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதே வேலையில் எக்ஸ் வலைத்தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த கணக்குளை எலான் மஸ்க் மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்கினார் என அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்டிரே டிமோரேஸ் குற்றம் சாட்டினார்.
மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்தார். அதோடு, பிரேசிலில் ‘எக்ஸ்’ தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள ‘எக்ஸ்’ அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும் பிரேசிலில் ‘எக்ஸ்’ சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: பிஞ்சு குழந்தைகளுக்காக போரை நிறுத்திய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்.. என்ன காரணம் தெரியுமா?
இதற்கிடையில் பிரேசிலில் எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்டிரே டிமோரெஸ் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்க உத்தரவிட்டார். தவறினால் எக்ஸ் தளம் முடக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை எலான் மஸ்க் ஏற்க மறுத்துவிட்டார். எனவே பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படுவதாக நீதிபதி அலெக்ஸாண்டிரே டிமோரெஸ் உத்தரவு பிறப்பித்தார். மேலும் எக்ஸ் வலைத்தளத்தை முழுமையாக நீக்க அந்த நிறுவனத்திற்கு 24 மணி நேரம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
𝕏 is the most used news source in Brazil. It is what the people want.
Now, the tyrant de Voldemort is crushing the people’s right to free speech. https://t.co/gR8aq3JzzU
— Elon Musk (@elonmusk) August 31, 2024
மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் ‘எக்ஸ்’ செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் ‘எக்ஸ்’ செயலியை பதிவிறக்கம் செய்தால் 8,874 டாலர் அப்ராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் தனி நீதிபதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.