5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இன்ஸ்டா வலை.. ரசிகர்களை அடிமையாக்கி பாலியல் தொழில்.. பிரபல மாடல் கைது.. ஷாக் சம்பவம்!

சமூக வலைத்தளங்களில் அதிகமான ஃபாலோயர்ஸ் கொண்ட இவர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மாடல் கேட் டோரஸ் கடந்த 2022ல் இவருடன் வசித்து வந்த இரண்டு பெண்கள் மாயமானார்கள். இதையடுத்து இது தொடர்பான வழக்கை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியது. அப்போது தான் இந்த மாடல் பெண்களைக் கடத்தி, அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.

இன்ஸ்டா வலை.. ரசிகர்களை அடிமையாக்கி பாலியல் தொழில்.. பிரபல மாடல் கைது.. ஷாக் சம்பவம்!
கேட் டோர்ஸ்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 16 Jul 2024 19:03 PM

கேட் டோர்ஸ் : கேட் டோர்ஸ் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து, அடிமைப்படுத்தியதற்காகப் பிரேசிலின் முன்னாள் மாடலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உடல் ஆரோக்கிய இன்ஃப்ளுயன்ஸருமான கேட் டோரஸ் (Kat Torres) என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2022-ல் கேட் டோரஸிடம் வேலைக்குச் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன வழக்கில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான FBI மேற்கொண்ட விசாரணை மூலம், மனித கடத்தல், பெண்களை அடிமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களை கேட் டோரஸ் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அதிகமான ஃபாலோயர்ஸ் கொண்ட இவர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மாடல் கேட் டோரஸ் கடந்த 2022ல் இவருடன் வசித்து வந்த இரண்டு பெண்கள் மாயமானார்கள். இதையடுத்து இது தொடர்பான வழக்கை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியது. அப்போது தான் இந்த மாடல் பெண்களைக் கடத்தி, அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரி, வங்கி நாளை லீவ்.. மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை!

கேட் டோர்ஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், ” கேட் டோர்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பதிவுகள் ஊக்கம்மளிக்கக்கூடியதாக இருக்கும். அவரது வெற்றி கதையை கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. இதன் காரணமாக நான் அவரை பின் தொடர ஆரம்பித்தேன். ஆனால் போக போக அவர் என்னை நடத்தும் விதம் குறித்து எனக்கு சந்தேகம் வரத்தொடங்கியது. மேலும் அவர் என்னை அடிமையாக நடத்தியதும், அதில் அவர் இன்பம் அடைந்ததும் தெரிந்துக்கொண்டேன். பின் கடுமையான சவால்களுக்கு மத்தியில் கேட் டோர்ஸிடம் இருந்து நான் தப்பித்து வந்தேன்” என கூறியுள்ளார்.

இதேபோல் வேறு ஒருவர் கூறுகையில், கேட் டோர்ஸ் நம்பி அமெரிக்கா வரை சென்ற அவர், பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் மாயமான நிலையில் அவர்களின் குடும்பத்தினர், அவர்களை கண்டுபிடிக்க சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்தனர். இதையறிந்த கேட் டோரஸ், ஊடகங்களின் கவனத்திலிருந்து தப்பிக்க அந்தப் பெண்களுடன் டெக்சாஸிலிருந்து மைனேக்கு (Maine) சென்றார். அதோடு, தாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை என அந்த பெண்களையே வீடியோவும் பதிவிட வைத்தார். இவ்வாறான சூழலுக்கிடையில், கடந்த நவம்பரில் கேட் டோரஸ் ஒருவழியாக கைதுசெய்யப்பட்டார். தற்போது, இதில் FBI-ன் விசாரணை முடிவில் கேட் டோரஸுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் தங்கப் பதக்க வரலாறு.. இதுவரை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா..?

Latest News