காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்களை கைது செய்த கனட போலீசார் - Tamil News | | TV9 Tamil

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்களை கைது செய்த கனட போலீசார்

Updated On: 

04 May 2024 10:44 AM

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்களை கைது செய்த கனட போலீசார்

ஹர்தீப் சிங்

Follow Us On

ஹர்தீப் சிங் கொலை வழக்கு:

கனடா மற்றும் இந்தியா என இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இருநாட்டுகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றாச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால், இவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டதோடு, இருநாடுகளும் தூதரக உயர் அதிகாரிகயை வெளியேற்றியது பெரும் சலசலப்பை கிளப்பியது.

Also Read : ”கொரோனா தடுப்பூசி சிலருக்கு பக்க விளைவை ஏற்படுத்தும்” அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பகீர்!

3 இந்தியர்கள் கைது:

மேலும், கனடா நாட்டவர்களுக்கு நுழைவு விசா வழங்குவதை இந்திய தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. இப்படியாக இருக்கும் நிலையல், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ரார் ஆகிய மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்களுக்கு எதிராக கொலை, கொலைக்கு சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கண்டறியப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read : 70,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்.. பேரிடியாக அமைந்த 2024.. பகீர் ரிப்போர்ட்

கைது மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கனடா போலீசார் விரைவில் தெரிவிப்பார்கள்.  இதற்கிடையே, கடந்த வாரம் கனடாவில் ஐஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்ட நிகழ்ச்சியல் காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்து, கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

டிஆர்பியில் இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
இந்த கியூட் பையன் இப்போ பெரிய நடிகர்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
Exit mobile version