5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!

தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில், கனடா நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. தற்காலிக குடியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
கனடா பிரதமர் (Image Credit: Getty/PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Sep 2024 16:46 PM

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று படித்து அங்கேயே வேலை ஆரம்பித்து செட்டில் ஆகுகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இந்திய மாணவர்கள் மேற்படிப்பை படித்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. இதில் குறிப்பாக வெளிநாட்டிற்கு சென்று படிப்பவர்களில் பெரும்பாலான கனடாவை தேர்வு செய்யவார்கள்.  ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் வருகை புரிந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.

இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்:

இப்படியான சூழலில் தான் கனடா அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது. இது இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்த உள்ளது. தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில், கனடா புதன்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது.

Also Read: ஆயுதங்களாக மாறிய பேஜர்கள்… திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்?

அதாவது, தற்காலிக குடியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்த முடிவுகள் இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த ஆண்டு 35% குறைவான சர்வதேச மாணவர்களுக்கு அனுமதி வழங்குகிறோம். அடுத்த ஆண்டு, அந்த எண்ணிக்கை மேலும் 10% குறையும். குடியேற்றம் என்பது எங்கள் பொருளாதாரத்தில் ஒரு நல்ல விஷயம்.

கனடா அரசு போட்ட புது ரூல்ஸ்:

ஆனால் தவறான நபர்கள் மூலம் இந்த முறை மோசமான நிலைக்கு செல்லும்போது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது” என்று தனது எக்ஸ் தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடா அரசின் குடியேற்ற தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் 5,09,390 பேர் என வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1,75,920 பேருக்கும் அனுமதித்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கையானது 2025ஆம் ஆண்டில் சர்வதேச ஆய்வு அனுமதிகளின் எண்ணிக்கையை 4,37,000 ஆகக் குறைக்கும் என்று தெரிகிறது. இந்திய மாணவர்களிடையே மிகவும் விருப்பமான நாடுகளில் கனடாவும் ஒன்று.

இந்திய அரசாங்கத்தால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சுமார் 13.35 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர், அவர்களில் சுமார் 4.27 லட்சம் பேர் கனடாவில் உள்ளனர். 2013 மற்றும் 2022 க்கு இடையில் கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் என பெரிய அளவில் உயர்ந்தது.

அடுத்த ஆண்டு தேர்தல்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இப்படியான சூழலில், சர்வதேச மாணவர் அனுமதிகளை குறைக்கும் கனடா அரசின் நடவடிக்கையால், இந்திய மாணவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படலாம்.

Also Read: டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி.. பரபரப்பில் அமெரிக்க அரசியல் களம்!

கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில், ட்ரூடா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Latest News