Canada PM: அதிகரிக்கும் அழுத்தம்.. ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - Tamil News | canada mps call for justin trudeaus resignation set October 28 as deadlines | TV9 Tamil

Canada PM: அதிகரிக்கும் அழுத்தம்.. ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

இந்தியா கனடாவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். வரும் 28ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் எனவும் சொந்த கட்சி எம்.பிக்களே ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

Canada PM: அதிகரிக்கும் அழுத்தம்.. ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

கனடா பிரதமர்

Updated On: 

24 Oct 2024 15:04 PM

இந்தியா கனடாவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். வரும் 28ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் எனவும் சொந்த கட்சி எம்.பிக்களே ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு கனடாவில் பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைத்தார்.

பதவி விலகும் கனடா பிரதமர்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கனடாவில் தேர்தல் நடக்கும் சூழலில், அடுத்த ஆண்டு கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தான், ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உட்கட்சி பிரச்னை, எம்பிக்கள் அதிருப்தி போன்ற காரணங்களால் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கூறியுள்ளனர். நேற்று லிபரல் கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கலந்து கொண்டார்.

அப்போது, அதிருப்தி எம்.பிக்கள் தங்கள் குறைகளை தெளிவாக ஜஸ்டீன் ட்ரூடோ முன்னிலையில் கூறினர். இதற்கான ஆவணம் ஒன்றும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் 24 எம்.பிக்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: 5 ஆண்டுகளுக்கு பின் நடந்த சந்திப்பு.. பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங் பேசியது என்ன? சமரசம் எட்டப்பட்டதா?

கனடா அரசியலில் பரபரப்பு:

மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி காரணமாக ட்ரூடோ பதவி விலக வேண்டும் என எம்.பிக்கள் கருதுகின்றனர்.  3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல எம்.பிக்கள் அடுத்த தேர்தலுக்கு முன்பாக ட்ரூடோ பதவி விலக என வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், பல எம்.பிக்கள் ட்ரூடோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.  லிபரல் கட்சி பொறுப்பேற்றதில் இருந்தே விலைவாசி உயர்வு, சர்வதேச பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஆளும் லிபரல் கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

இதனால் அடுத்த தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமகா ட்ரூடோ பதவி விலக வேண்டும் என சொந்த கட்சி எம்.பிக்களை வலியுறுத்தியிருக்கின்றனர்.

மேலும், வரும் 28ஆம் தேதிக்குள் பதவி விலக என அவகாசம் கொடுத்துள்ளது. பதவி விலக தவறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.  இதனால் கனடா அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  இந்தியா கனடாவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பதவி விலக வேண்டும் குரல் எழுந்துள்ளது  பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also Read: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்த ட்ரம்ப்.. கமலா ஹாரிஸ் மீது கடும் விமர்சனம்!

கனடா – இந்தியா பிரச்னை:

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இருநாட்டுகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே குற்றச்சாட்டி இருந்தார். இது விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, கனடாவில் இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டியதை அடுத்து, இந்திய தூதர்களை திரும்ப பெறுவதாக இந்தியா அறிவித்தது.

மேலும், இந்தியாவில் கனடா தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டது. இதனால் இருநாட்கள் உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதோடு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா கூறி வரும் நிலையில், இந்தியா மறுத்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!