China: 3 நாட்களாக தொண்டையில் இருந்த கரப்பான் பூச்சி.. அரண்டு போன முதியவர்! - Tamil News | china Man Wakes Up in the morning and Find Cockroach Stuck In Throat | TV9 Tamil

China: 3 நாட்களாக தொண்டையில் இருந்த கரப்பான் பூச்சி.. அரண்டு போன முதியவர்!

Published: 

11 Sep 2024 19:35 PM

பொதுவாகவே பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்களை கண்டால் பலரும் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். அதுவும் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் கரப்பான் பூச்சி என்றால் சொல்லவா வேண்டும். ஓடுவது ஒருபக்கம் என்றாலும், அடிக்க பாய்ந்தால் திடீரென பறப்பது என அதனை விரட்டுவதற்குள் நாம் ஒருவழியாகி விடுவோம். சில இடங்களில் கரப்பான் பூச்சியை சில இடங்களில் உணவாகவும் சாப்பிடவும் செய்கிறார்கள்.

China: 3 நாட்களாக தொண்டையில் இருந்த கரப்பான் பூச்சி.. அரண்டு போன முதியவர்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

மூச்சுக்குழாயில் கரப்பான் பூச்சி: சீனாவில் 58 வயதான நபர் ஒருவரின் மூச்சு குழாயில் கரப்பான் பூச்சி தங்கி இருந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உயிரினங்களை கண்டால் பலரும் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். அதுவும் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் கரப்பான் பூச்சி என்றால் சொல்லவா வேண்டும். ஓடுவது ஒருபக்கம் என்றாலும், அடிக்க பாய்ந்தால் திடீரென பறப்பது என அதனை விரட்டுவதற்குள் நாம் ஒருவழியாகி விடுவோம். சில இடங்களில் கரப்பான் பூச்சியை சில இடங்களில் உணவாகவும் சாப்பிடவும் செய்கிறார்கள். இத்தகைய கரப்பான் பூச்சி ஒருவரின் மூச்சுக்குழாயினுள் இருந்த சம்பவம் பற்றி காணலாம்.

Also Read: Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் வசிக்கும் 58 வயதான அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு வழக்கம் போல தூங்கியுள்ளார். அப்போது நடுஇரவில் அவரது மூக்கின் உள்ளே ஏதோ ஊர்வது போன்ற வினோதமான உணர்வு ஏற்பட்டுள்ளதை கண்டு திடுக்கிட்டு எழுந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மூக்கில் ஏற்பட்ட உணர்வு திடீரென தொண்டையில் ஏற்படுவதை கண்டு இருமல் போட்டும் சரி செய்ய பார்த்துள்ளார். ஒருவேளை இரவில் தான் சாப்பிட்டது எதுவும் செரிமானம் ஆகவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட அவர் தண்ணியை குடித்து சரி செய்ய முயன்றுள்ளார். ஆனால் எதுவும் கேட்காத நிலையில் முயற்சியால் சோர்வடைந்தவர் மீண்டும் தூங்கியுள்ளார்.

Also Read: Tamilnadu Weather Alert: கொளுத்தும் வெயில்.. அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கும் வானிலை.. அப்போ மழை?

அடுத்த நாள் காலை எழுந்ததும் இரவு நடந்த சம்பவத்தை மறந்து விட்டு வழக்கம் போல தனது அன்றாட பணிகளை அந்த 58 வயதான நபர் தொடர்ந்துள்ளார். ஆனால் அடுத்த 3 நாட்களில் வழக்கத்திற்கு மாறாக அவர் மூச்சு விடும் போது துர்நாற்றம் வீசி தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் வேறு எங்கோ இருந்து வீசுவதாக நினைத்த அவர், பின்னர் தன்னிடம் இருந்து தான் அந்த வாடை வீசுவதை உணர்ந்துள்ளார். மேலும் பல் துலக்குதல் உள்ளிட்ட வாய் வழி சுகாதாரத்தை மிகச்சிறப்பான முறையில் பராமரிக்கும் தனக்கு ஏன் இப்படி ஏற்பட்டது என புரியாமல் குழம்பி போனார். ஆனால் துர்நாற்றம் தொடர்ந்ததால் உடனடியாக பயந்து போய் மருத்துவரை அணுகி உள்ளார்.

முதலில் காது மூக்கு தொண்டை மருத்துவர் ஒருவரை ஹைனான் மாகாண மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மூச்சுக்குழாயை பரிசோதித்ததில் அதில் அசாதாரணமான நிகழ்வுகள் எதுவும் தென்படவில்லை. இருந்தாலும் அந்த மருத்துவர் சந்தேகத்தின் பெயரில் நுரையீரல் சம்பந்தப்பட்ட மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளார். அந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவரை சிடி ஸ்கேன் செய்து பரிசோதனை செய்தார். இதில் அவரது வலது கீழ் நுரையீரலில் பின்புறத்தின் அடிப்பக்கத்தில் ஏதோ ஒரு பொருள் கருப்பாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Also Read: Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!

உடனடியாக அந்த நபரிடம் என்னவென்று விசாரிக்க அவர் எனக்கு எதுவும் தெரியாது, தான் அப்படி எதுவும் உணவாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ப்ரான்கோஸ்கோப்பி பரிசோதனை மூலம் நுரையீரலில் உரிய பரிசோதனை செய்தபோது குறிப்பிட்ட அந்த இடத்தில் பரிசோதனையில் தெரிந்த அந்த பொருள் சளியால் மூடப்பட்டிருந்தது. உடனடியாக சளியை எல்லாம் அகற்றி விட்டு அந்த பொருள் என்னவென்று பார்த்த மருத்துவருக்கு ஒருகணம் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அந்த பொருள் கரப்பான் பூச்சி தான். அதுவும் 3 நாட்கள் அந்த கரப்பான் பூச்சி உயிருடன் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அந்த நபர் மீண்டும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version