5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

China: நேரலையில் அதிகளவு உணவு சாப்பிட்ட இளம்பெண் மரணம் – என்ன நடந்தது?

ChineseInfluencer: பான் ஸியோடிங் சமூக வலைத்தளங்களில் மிகவும் பேமஸான நபராக வலம் வந்துள்ளார். அவரின் பதிவுகளில் இணையவாசிகளும், ரசிகர்களும் சில சவால்களை கொடுப்பது வழக்கம். அதனை சரியாக நேரலை வீடியோவில் செய்து காட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

China: நேரலையில் அதிகளவு உணவு சாப்பிட்ட இளம்பெண் மரணம் – என்ன நடந்தது?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 22 Jul 2024 10:54 AM

சீனா: சீனாவில் ஒரே நேரத்தில் 10 கிலோ உணவை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான அந்த இளம்பெண் பெயர் பான் ஸியோடிங் என்பதாகும். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்த நிலையில் ஒரு வாரம்  கழித்தே அந்த பெண் உயிரிழந்த காரணம் வெளிவந்துள்ளது. பான் ஸியோடிங் சமூக வலைத்தளங்களில் மிகவும் பேமஸான நபராக வலம் வந்துள்ளார். அவரின் பதிவுகளில் இணையவாசிகளும், ரசிகர்களும் சில சவால்களை கொடுப்பது வழக்கம். அதனை சரியாக நேரலை வீடியோவில் செய்து காட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அதிக அளவு சாப்பாட்டை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டது தான் அவரது இறப்புக்கே காரணமாக அமைந்து விட்டது. பான் ஸியோடிங் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததே அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்ததாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

Also Read: Egg Benefits: தினமும் ஒரு வேகவைத்த முட்டை போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் கிடைக்கும்!

பான் ஸியோடிங் 10 மணி நேரம் தொடர்ந்து சாப்பிட வேண்டிய சவாலை எதிர்கொண்டதாகவும், இதனை செய்யக்கூடாது என அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. பான் ஸியோடிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு முற்றிலும் சிதைந்துள்ளதாகவும், அதில் செரிக்கப்படாத உணவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இதுபோன்ற அநாவசியமான செயல்களில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பான் ஸியோடிங் மரணத்துக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக2021 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் இதுபோன்ற அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் உணவு சாப்பிடுவதைத் தடைசெய்தது. இதுதொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளில் உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து அதிக உணவை ஆர்டர் செய்வதைத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Healthy Relationship : உங்க பாட்னர் பற்றி தெரிஞ்சுக்கனுமா? இந்த அறிகுறிகள் வைச்சு டெஸ்ட் பண்ணுங்க

இணைய புகழ் மோகம்

சமூக வலைத்தளங்கள் புழக்கம் அதிகமான பிறகு வயது வித்தியாசமில்லாமல் பலரும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது, ஆபத்தான சவால்களை செய்வது, பிறரை வெறுப்பேற்றி பார்ப்பது, வெறுப்புணர்வை தூண்டுவது, விளையாட்டு என்கிற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற பல செயல்களை செய்து வருகின்றனர். இதனால் புகழ் கிடைப்பது ஒருபக்கம் இருந்தாலும் பலரின்  வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. தற்கொலை தொடங்கி கொலை செய்வது வரை என விரும்பத்தகாத செயல்களும் இதுபோன்ற இணைய மோகம் விஷயத்தில் நடைபெறுகிறது. தொழில்நுட்பங்களும், அதன் வளர்ச்சிகளும் எதற்காக என்பதை ஆராய்ந்து உபயோகிக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் இருந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News