”கொரோனா தடுப்பூசி சிலருக்கு பக்க விளைவை ஏற்படுத்தும்” அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பகீர்!
கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாகக் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கமும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பும், உலகம் முழுவதும் சந்தித்த ஊரடங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தடுப்பூசி:
தற்போது தான், உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி என்றே சொல்லலாம்.
இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதாக பல்வேறு அறிக்கைகள் கூறு வருகின்றனர். இந்த நிலையில் தான், கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாகக் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிட்ஷில்டு எனும் தடுப்பூசியை தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா காலக்கட்டத்தில் செலுத்தப்பட்டது.
எனவே, அஸ்ட்ராஜெனெகா நிறுவன தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
“கோவிஷீல்டு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்”
51 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம், “தங்களின் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு TTS (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) எனும் ரத்தம் உறைதல் மற்றம் ரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இதற்கு காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால், இந்த டிடிஎஸ் பாதிப்பு தடுப்பூசியால் தான் ஏற்பட்டு இருக்கலாம் வேண்டும் என்று இல்லை. தடுப்பூசி இல்லாமல் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே, ஒவ்வொரு நபருக்கும் பாதிப்பு ஏற்பட்ட பல காரணங்கள் உள்ளன” என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.