Crime: ஒலிம்பிக் நடக்கும் பாரிஸில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! - Tamil News | Paris, Australia Woman, Physically Harassment | TV9 Tamil

Crime: ஒலிம்பிக் நடக்கும் பாரிஸில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Updated On: 

24 Jul 2024 11:34 AM

Paris: ஆடை கிழிந்து சிதைந்த நிலையில் இருக்கும் அப்பெண்ணை கண்டவுடன் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு நபர் கடைக்குள் நுழைந்து அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.ஆனால் அப்பெண் தன்னை தாக்கியவர்களில் இவனும் ஒருவர் என அந்த நபரை அடையாளம் காட்டியுள்ளார்.

Crime: ஒலிம்பிக் நடக்கும் பாரிஸில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கோப்பு புகைப்படம்

Follow Us On

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்படியான நிலையில் அங்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாரிஸில் உள்ள பிக்லே மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ளசிசிடிவி காட்சிகளில் அப்பகுதியில் செயல்படும் இறைச்சி உணவக கடை ஒன்றுக்குள் ஆடைகள் கிழிந்த நிலையில் இளம்பெண் ஒருவர் பயத்துடன் தஞ்சம் புகுவது இடம் பெற்றுள்ளது. பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு.. விசாரணையை தீவிரப்படுத்தும் குற்றப்பிரிவு போலீசார்..

பதற்றத்தை உண்டாக்கிய சிசிடிவி காட்சிகள்

அந்த உணவகத்தினுள் அந்த இளம்பெண் நுழைந்தவுடன் உணவக உரிமையாளர்கள் காவல்துறைக்கு அழைத்து விவரத்தை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வந்து விசாரணை நடத்தி அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். முன்னதாக அந்த கடையில் அப்பெண் ஓடிவந்து உதவி கேட்கிறார். ஆடை கிழிந்து சிதைந்த நிலையில் இருக்கும் அப்பெண்ணை கண்டவுடன் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு நபர் கடைக்குள் நுழைந்து அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.ஆனால் அப்பெண் தன்னை தாக்கியவர்களில் இவனும் ஒருவர் என அந்த நபரை அடையாளம் காட்டியுள்ளார்.

உடனே வாடிக்கையாளர்களில் ஒருவர் என்னவென்று விசாரிக்க சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். கிட்டதட்ட 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 19 அல்லது 20ஆம் தேதி நடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடத்தி வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் பாரிஸ் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Also Read: Amstrong Murder: செல்போன் ஆடியோ.. கொலைக்கான சதி.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளிடம் மீண்டும் விசாரணை!

புலம்பெயர்ந்த மக்கள் மீது குற்றச்சாட்டு

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆப்பிரிக்க மக்களின் தோற்றத்தில் இருந்ததாக அப்பெண் கூறியுள்ளார். இதன்மூலம் புலம்பெயர்ந்த மக்களிடம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். பிரான்சில் சுமார் 7 மில்லியன் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நிலையில், சமீபகாலமாக இவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாரிஸில் நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அந்நகருக்கு வருகை தந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version