Did You Know: சாதாரண தபால்காரர்.. அரண்மனை கட்டிய வரலாறு தெரியுமா? - Tamil News | Ferdinand Cheval, the ideal palace | TV9 Tamil

Did You Know: சாதாரண தபால்காரர்.. அரண்மனை கட்டிய வரலாறு தெரியுமா?

Ferdinand Cheval :அந்த அரண்மனை தோற்றம் இங்கிலாந்தின் அரசு இல்லம் ஸ்பெயினின் தேவாலயம், எகிப்திய பாணி கோயில், இரண்டு நீர்வீழ்ச்சிகள் கொண்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்டது. கட்டடக்கலை பற்றிய துளியும் அறிவில்லாமல் செவல் கட்டிய இந்த அரண்மனை இன்றைக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும்.

Did You Know: சாதாரண தபால்காரர்.. அரண்மனை கட்டிய வரலாறு தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

20 Jul 2024 16:39 PM

உங்களுக்கு தெரியுமா?: பிரான்சில் ஒரு தபால்காரர் ஒரு கோட்டையை கட்டிய கதையை கேட்டால் நிச்சயம் நம் அனைவருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட கதை 187ல் நடந்துள்ளது. பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் சார்ம்ஸ்-சர்-எல்’ஹெர்பஸ்ஸில் என்ற பகுதியில் சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஃபெர்டினாண்ட் செவல். 13 வயதில் பள்ளிப் படிப்பை கைவிட்டு தொழிற்பயிற்சி கற்றுக்கொள்ள தொடங்கிய செவல் இறுதியாக தபால் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். முதல் மனைவி ரோசலினை 1858ல் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர் 1865ல் இறந்தார். அதனைத் தொடர்ந்து செவல் 5 ஆண்டுகள் கழித்து கிளாரி-பிலோமினே ரிச்சட்டை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

கோட்டை கட்டத் தொடங்கிய கதை

தனது 43 வயதில் தபால்காரரான செவல் அந்த கோட்டையை கட்டத் தொடங்கினார். அதற்கு மிகவும் தூண்டுதலாக அமைந்தது அவர் கண்ட கனவு. அதில், ஒரு இடத்தில் மிக வேகமாக நடந்து கொண்டிருந்த செவலில் காலில் ஏதோ ஒன்று சிக்கியுள்ளது. அப்படியாக அந்த கனவின் முடிவில் கோட்டை போன்ற ஏதோ ஒன்றை கட்டியிக்கும் காட்சிகள் வெளிப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் சொன்னால் கிண்டல் செய்வார்கள் என கூறி அதனை தனக்குள்ளே வைத்திருந்துள்ளார்.

சரியாக 15 ஆண்டுகள் கழித்து செவல் ஒரு இடத்தில் தடுக்கி விழுந்துள்ளார். அந்த இடத்தில் வித்தியாசமான கல் கிடைக்க அதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீடு வந்துள்ளார். மறுநாள் அதே இடத்தில் செல்ல இன்னும் பல கற்கள் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 33 ஆண்டுகள் தபால் கொடுக்கும் செல்லப்போகும் போதெல்லாம் கற்களை சேகரித்துள்ளார். அதனை ஒரு இடத்தில் அரண்மனை கட்டடம் கட்ட ஆரம்பித்தார்.முதல் 20 ஆண்டுகள் வெளிப்புறச் சுவர்களைக் கட்டிய செவல், கிட்டதட்ட அந்த அரண்மனையை கட்ட 10 ஆயிரம் நாட்களை எடுத்துக் கொண்டார்.

அந்த அரண்மனை தோற்றம் இங்கிலாந்தின் அரசு இல்லம் ஸ்பெயினின் தேவாலயம், எகிப்திய பாணி கோயில், இரண்டு நீர்வீழ்ச்சிகள் கொண்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்டது. கட்டடக்கலை பற்றிய துளியும் அறிவில்லாமல் செவல் கட்டிய இந்த அரண்மனை இன்றைக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும்.

இந்த அரண்மனையில் தன் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என செவல் விரும்பினார். ஆனால் அரசு மறுக்கவே தனக்கென கல்லறையை கட்டினார். எட்டு ஆண்டுகள் செலவிட்டு கட்டப்பட்ட அந்த கல்லறையில், கட்டி முடித்த ஒரு வருடத்தில் செவல் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டார். செவலின் 2 மனைவிகள், 3 குழந்தைகள் என அனைவரும் அவரின் மரணத்துக்கு முன்னரே உயிரிழந்து விட்டனர். இவரின் கதை 2018ல் The Ideal Palace என்ற பெயரில் படமாக வெளியானது. என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?