Did You Know: தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த கோழி – எப்படி தெரியுமா?

Headless Chicken: லாயிட் ஓல்சன் அமெரிக்கா முழுவதும் தலையில்லா கோழியை புகழ்பெற செய்தார். பல இதழ்களில் அட்டைப்படத்தில் அக்கோழி இடம் பெற்றது.மேலும் பொதுமக்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டது. 18 மாதங்கள் உயிருடன் இருந்த மைக் கோழிக்கு, 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சுற்றுப்பயணத்தின் போது இறந்தது.

Did You Know: தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த கோழி - எப்படி தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

18 Jul 2024 12:57 PM

உங்களுக்கு தெரியுமா? : உலகமெங்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஏதேனும் ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிறிய உயிரினங்கள் தொடங்கி மனிதர்கள் வரை ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு விஷயத்தையும், அதன் கணிப்பையும் முறியடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இறைச்சிக்காக நாம் சாப்பிடும் அனைத்து உயிரினங்களையும் கொல்வதற்கு முதலில் நாம் கழுத்தில் தான் வெட்டுவோம் அல்லவா? – அப்படியாக ஒரு கோழியை சாப்பிட முயற்சித்தபோது அது தலை வெட்டுப்பட்ட நிலையில் உயிரோடு 18 மாதங்கள் இருந்துள்ள கதையை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்த சம்பவம் 1945 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இந்த அதிசய கோழியைப் பற்றி விக்கிப்பீடியா பக்கமே உள்ளது. கிட்டதட்ட அன்றைக்கு அதன் புகைப்படம் பல மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது. எப்படி அந்த கோழி உயிருடன் இருந்தது என்பதை காணலாம்.

சமைக்க முயன்ற உரிமையாளர் 

1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலராடோ பகுதியில்வசித்து வந்த லாயிட் ஓல்சன் என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட திட்டமிட்டிருந்தார். இதற்காக தாங்கள் வளர்த்து வந்த கோழியில் ஒன்றை எடுத்துக்கொள்ள அவரது மனைவி முடிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி மனைவியால் லாயிட் ஓல்சன் கோழியை கொண்டு வர வீட்டின் முற்றத்திற்கு அனுப்பப்பட்டார். அந்த விவசாயியும் மைக் என்ற ஐந்தரை மாத வயதுடைய வயண்டோட் வகை கோழியைத் தேர்ந்தெடுத்தார். ஒரு கத்தியை எடுத்து கோழி கழுத்தில் ஒரு போடு போட்டார். தலை துண்டான நிலையில் கோழி இறந்துவிட்டதாக நினைத்து அதை வீட்டு சமயலறைக்குள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது தான் அந்த கோழி உயிருடன் இருப்பது தெரிய வந்தது. லாயிட் ஓல்சன் வெட்டியதில் கோழியில் கழுத்து நரம்பு, ஒரு காது, மூளைத்தண்டு எல்லாமே அப்படியே இருந்துள்ளதே கோழி உயிர் பிழைக்க காரணமாக அமைந்தது.

கோழி கொக்கரிக்கும் இடத்தில் அதற்கு பதிலாக தொண்டையில் ஒருவிதமான ஒலி எழும்பி கொண்டிருந்தது. ஓல்சன் சொட்டு மருந்து வழங்குவது போல பால் மற்றும் தண்ணீர் கலவையை அதற்கு ஊட்டினார். சோளம் மற்றும் புழுக்களையும் கொடுத்து வந்துள்ளார்.

அமெரிக்கா முழுவதும் புகழ்

இதனைத் தொடர்ந்து லாயிட் ஓல்சன் அமெரிக்கா முழுவதும் தலையில்லா கோழியை புகழ்பெற செய்தார். பல இதழ்களில் அட்டைப்படத்தில் அக்கோழி இடம் பெற்றது.மேலும் பொதுமக்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டது.

18 மாதங்கள் உயிருடன் இருந்த மைக் கோழிக்கு, 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சுற்றுப்பயணத்தின் போது மூச்சுத் திணறத் தொடங்கியது. தொண்டையில் சோளத்தின் வித்து இருந்ததை லாயிட் ஓல்சன் கண்டறிந்தார். தனது கவனக்குறைவால் இப்படி நிகழ்ந்ததை அவர் அறிந்தார். மூச்சுத்திணறல் காரணமாக மைக் உயிரிழந்து விட்டது. அதேசமயம் கோழியின் தலை வெட்டப்பட்டபோது இரத்தம் வராமல் உள்ளே உறைந்ததால் அது இறப்புக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

மைக்கின் நினைவாக 1999 ஆம் ஆண்டு முதல் மே மாதத்தின் மூன்றாவது வாரம் Mike the Headless Chicken Day” கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?