5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Did You Know: திருடப்பட்டதால் பிரபலமான மோனாலிசா ஓவியம் – என்ன கதை தெரியுமா?

MonaLisa: கிட்டதட்ட ஓவியம் திருடப்பட்டு ஒருநாள் கழித்தே விஷயம் தெரிந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவை கொண்ட அந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அருங்காட்சியகம் உள்ளே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.ஆனால் அப்போதெல்லாம் மோனாலிசா பிரபலமாகவில்லை. அதன்பிறகு படிக்கட்டில் ஆதாரம் கிடைக்க விசாரணை துரிதமானது.

Did You Know: திருடப்பட்டதால் பிரபலமான  மோனாலிசா ஓவியம் – என்ன கதை தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Aug 2024 16:55 PM

உங்களுக்கு தெரியுமா?: நிச்சயமாக லியோனார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைந்தபோது , ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது ஒரு குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்னால் பிரெஞ்சு அருங்காட்சியகத்தில் தொங்கவிடப்படும் என்று அவர் கற்பனை கூட செய்திருக்க மாட்டார். அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள் எனவும் கனவும் கண்டிருக்கமாட்டார். அப்படிப்பட்ட அந்த ஓவியம் திருடப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. 1911 ம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி லூயிஸ் பெருட் என்ற ஓவியர், லூவ்ருரில் உள்ள சலோன் கேரே அருங்காட்சியகத்துக்குச் சென்றார். அப்போது தான் அந்த மிகப்பெரிய சம்பவம் கண்டறியப்பட்டது.

அவர் உள்ளே சென்றதும் அங்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த ஆணிச்சட்டங்கள் மட்டுமே இருந்தது. உடனடியாக அந்த அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் பிரிவு தலைவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் புகைப்படங்கள் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லியுள்ளார். ஆனால் அங்கு இல்லாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் முழுவதும் தேடியும் ஓவியம் கிடைக்கவில்லை. உடனடியாக பாரீஸ் நகர போலீசார் அழைக்கப்பட்டனர். அருங்காட்சியகத்தை மூடி விட்டு தேட முடிவு செய்து அங்கிருந்த மக்களை விஷயத்தை சொல்லாமல் வெளியேற்றினர். தேடுதல் வேட்டையில் மோனாலிசம் ஓவியம் திருடப்பட்டது உறுதியானது.

கிட்டதட்ட ஓவியம் திருடப்பட்டு ஒருநாள் கழித்தே விஷயம் தெரிந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவை கொண்ட அந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அருங்காட்சியகம் உள்ளே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது. ஆனால் அப்போதெல்லாம் மோனாலிசா பிரபலமாகவில்லை. அதன்பிறகு படிக்கட்டில் ஆதாரம் கிடைக்க விசாரணை துரிதமானது. எப்படி இத்தனைப் பேர் வந்து செல்லும் இடத்தில் திருட்டு சம்பவம் நடந்திருக்கும் என அனைவரும் குழம்பி போயினர்.

ஆனால் அருங்காட்சியக பாதுகாப்பு மேலாளர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆய்வு செய்தபோது ஓவியம் இருந்ததை பார்த்ததாகவும், ஒரு மணி நேரம் கழித்து அந்த பக்கமாக மீண்டும் போனபோது ஓவியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அப்போது மணி 8 இருக்கும் எனவும் கூறினார். ஆக காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருட்டு நடந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சுத்தம் செய்ய அருங்காட்சியகம் மூடப்பட்டும். இதனையடுத்து சுமார் 800 பேரிடம் விசாரணை நடைப்பெற்றது. அதில் ஒருவர் சம்பந்தமில்லாத நபர் அருங்காட்சியகம் வெளியே தொங்கிக்கொண்டிருந்ததை தான் பார்த்ததாக கூறினார். ஆனால் காவல்துறை ஆவணத்தில் எந்த புகைப்படமும் அந்த நபரை அடையாளம் காட்டும் வகையில் இல்லை.

பின்னர் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ரேகை கண்டறியப்பட்டது. மோனாலிசா ஓவியம் திருட்டு குறித்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. பிரான்ஸூம், ஜெர்மனியும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டன. மோனாலிசா தொங்கவிடப்பட்டிருந்த சுவரில் இருந்த வெற்று இடத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சாதாரண ஓவியமாக இருந்த மோனாலிசாவின் மதிப்பு இந்த இடத்தில் தான் எகிறியது.

சரியாக 2 ஆண்டுகளுக்குப் பின் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் வசித்து வந்த வியாபாரி ஆல்ஃபிரடோ ஜெரி பல இத்தாலிய செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார். அதில் “கலைப் பொருட்களை நல்ல விலையில் வாங்குபவர்” என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெரிக்கு லியோனார்டோ என பெயரிப்பட்ட மோனாலிசா ஓவியம் பற்றிய கடிதம் வந்துள்ளது.

உண்மையான மோனாலிசாவின் பிரதியை வைத்திருந்த ஒருவருடன் தான் பேசுவதாக ஜெரி ஆரம்பத்தில் நினைத்துள்ளார். ஆனால் ஓவியத்தை குறிப்பிட்ட ஒருநாளில் ஒரு இடத்தில் பார்க்க வேண்டும் என சொல்லி லியோனார்டோவுடன் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.ஓவியத்தின் பின்னால் இருந்த அடையாளத்தைக் கொண்டு திருடப்பட்டது என கண்டறிந்தார்.

இதன் பின்னர் பெருகியா என்ற லியானார்டோவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் திருடப்பட்ட காரணத்தைக் கேட்டபோது அனைவரும் அதிர்ந்து தான் போயினர். அதாவது மாவீரன் நெப்போலியனால் திருடப்பட்ட ஓவியத்தை இத்தாலிக்கு மீட்டெடுப்பதற்காக தான் அந்த ஓவியத்தை திருடியதாக அந்த நபர் கூறினார். விசாரணைக்குப் பின் பெருகியாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Latest News