Did You Know: விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல தடை.. ஏன் தெரியுமா?
Flight Travel: விமானத்தில் பேருந்து, ரயில் மாதிரி நம்முடைய லக்கேஜ்களை உடன் வைத்துக் கொள்ள முடியாது. அதனை பயணத்தின் தொடக்கத்தில் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அது நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றவுடன் நம்மை சேரும் வகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படியான விமானத்தில் சில பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
உங்களுக்கு தெரியுமா?: இந்தியாவை பொறுத்தவரை எந்த வகையான போக்குவரத்தாக இருந்தாலும் அதற்கென சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது வழக்கம்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தனிநபர் பாதுகாப்பை விட ஒட்டுமொத்த சக பயணிகளையும் பாதிக்கும். இது சம்பந்தப்பட்ட போக்குவரத்து மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் என்பதால் ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விஷயத்தில் அரசு, தனியார் நிறுவனம் மிகுந்த அக்கறைக் காட்டும். குறிப்பாக விமான போக்குவரத்தை சொல்ல வேண்டுமென்றால், உள்ளூர், வெளிநாடு என பல விதமாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும். இப்படி இருக்கும்பட்சத்தில் விமானத்தில் நம்முடைய உடைமைகளை கொண்டு செல்ல குறிப்பிட்ட அளவு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. பேருந்து, ரயில் மாதிரி நம்முடைய லக்கேஜ்களை உடன் வைத்துக் கொள்ள முடியாது. அதனை பயணத்தின் தொடக்கத்தில் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அது நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றவுடன் நம்மை சேரும் வகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படியான விமானத்தில் சில பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
இதையும் படிங்க: Gold Price August 09 2024 : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?
பொதுவாக விமானப் பயணத்துக்கு என நிபந்தனைகள் உள்ளது. விமான பயணத்தின்போது தீப்பற்றக்கூடிய பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை உடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் தேங்காயும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய் தென்னிந்தியாவில் அதிகமாகவும், மற்ற இடங்களில் பரவலாகவும் சமையலுக்கு, ஆன்மிக வழிபாட்டுக்கு என பயன்படுத்தப்படுகிறது. அப்படியான நிலையில் தேங்காயை ஏன் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதித்து இருக்கிறார்கள் என தெரியுமா?
இதையும் படிங்க: Neeraj Chopra: வெள்ளி பதக்கத்துடன் வீடு திரும்பும் நீரஜ் சோப்ரா.. பாகிஸ்தானின் நதீம் தங்கம் வென்று அசத்தல்..!
தேங்காயை பொறுத்தவரை அதில் அதிகளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய், எரியக்கூடிய பொருள்கள் என விமானத்துறை வகைப்படுத்தப்படுத்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.அந்த வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தேங்காய் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில விமான நிறுவனங்கள் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட தேங்காய்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. தேங்காயை சமையலுக்கு பயன்படுத்தும் நாம், அதன் ஓடுகளை எரிக்க பயன்படுத்துவோம்.
ஆனால் கடந்த ஆண்டு சபரிமலை சீசனின் போது பக்தர்கள் விமானங்களில் நெய் நிரப்பட்ட தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கென முறையான பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி சபரிமலை சீசன் முடியும் வரை இந்த விதி அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.