Did You Know: வரலாற்றில் நடந்த பெரிய திருட்டு.. மொத்தம் 1000 கார்கள்.. உலகையே அதிர வைத்த நாடு!

Biggest car Theft: கார்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் வாங்குவதற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவி செய்ததை வைத்தே ஸ்வீடன் அரசு எத்தகைய நல்லுறவை வடகொரியாவுடன் வளர்ந்திருந்தது என்பதை கணித்துக் கொள்ளலாம்.

Did You Know:  வரலாற்றில் நடந்த பெரிய திருட்டு.. மொத்தம் 1000 கார்கள்.. உலகையே அதிர வைத்த நாடு!

கோப்பு படம்

Updated On: 

12 Jul 2024 14:45 PM

North Korea: உலகில் பல்வேறு வகையான நாடுகள் உள்ளன. ஆனால் வடகொரியாவின் பெயரைச் சொன்னால் கடைநிலையில் உள்ள மக்கள் கூட அறிந்திருப்பார்கள். காரணம் அந்த நாட்டின் அரசாங்கத்தின் செயல்பாடு. அத்தகைய வடகொரியா அரசாங்கம் உலகின் மிகப்பெரிய கார் திருட்டில் ஈடுபட்டுள்ளது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? – ஆம். உண்மைதான். இந்த கார் திருட்டு சம்பவம் 1970களில் நடந்துள்ளது. அப்போது வடகொரியாவை ஆட்சி செய்தவர் தற்போது அதிபராக உள்ள கிம் ஜாங் உன்னின் தாத்தாவான கிம் இல் உன் தான். தற்போது வட கொரியாவின் பொருளாதார நிலை தள்ளாடும் நிலையில் அப்போதைய காலகட்டத்தில் மிகவும் நல்ல நிலைமையில் இருந்துள்ளது. இதற்கு மற்ற நாடுகள் வழங்கிய ஆதரவு காரணமாக இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.

Also Read: Indian 2 Review: இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? திரை விமர்சனம் இதோ!

நடந்தது என்ன?

1970 ஆம் ஆண்டு ஸ்வீடன் அரசாங்கம் வடகொரியா அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஸ்வீடனின் பொருளாதார உதவியுடன் கனராக இயந்திரங்கள் மற்றும் 1000 வால்வோ 144 ஷடான் கார்களை வாங்கி டாக்ஸிகளாக பயன்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இது அன்றைய காலகட்டத்தில் 70 மில்லியன் டாலராகும். ஆனால் வடகொரியா அரசு சொன்னபடி ஸ்வீடன் அரசுக்கு பணத்தை திருப்பி செலுத்தவில்லை. வால்வோ 144 கார்கள் எவற்றிற்கும் பணம் செலுத்த தவறியதால் இது வடகொரியா மட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய திருட்டாக கருதப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டு ஏற்றுமதி ஏஜென்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 49 ஆண்டுகளில் இந்த ஆயிரம் வால்வோ கார்களுக்கான தொகை, வாங்கிய கடனுக்கான வட்டி, அபராதம் என சேர்த்து கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 22,000 கோடி அந்நாட்டு அரசுக்கு வடகொரியா செலுத்த வேண்டி உள்ளது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை வைத்து கார்களுக்கான நிலுவைத் தொகை செலுத்தப்பட்டாலும் மீதமுள்ள தொகையை பெற முடியாமல் ஸ்வீடன் அரசு தொடர்ந்து திணறி வருகிறது.

Also Read: Actor Vijay: “ஒரே போன் கால்” – விஜய்யுடன் ராதாரவிக்கு ஏற்பட்ட பிரச்சினை தெரியுமா?

வேடிக்கையான விஷயம்

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை அந்நாட்டு அரசாங்கம் வடகொரியாவிற்கு செலுத்தபட வேண்டிய தொகை குறித்த அறிவிப்பை இன்றுவரை அனுப்பி வருகிறது.

உண்மையில் வடகொரியாவிற்கு மிகப்பெரிய அளவில் உதவி வந்த ஸ்வீடன் அரசு தனது உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இந்த நிதி பிரச்சனை மிக முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் வாங்குவதற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவி செய்ததை வைத்தே ஸ்வீடன் அரசு எத்தகைய நல்லுறவை வடகொரியாவுடன் வளர்ந்திருந்தது என்பதை கணித்துக் கொள்ளலாம்.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்