டீ குடித்தால் தங்கப் பஷ்பம், வெள்ளிக் கோப்பை இலவசம்.. தேநீர் ரேட் தெரியுமா?

Dubai Gold Karak Tea: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள கடையொன்றில் தேநீர் ஒன்று இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.

டீ குடித்தால் தங்கப் பஷ்பம், வெள்ளிக் கோப்பை இலவசம்.. தேநீர் ரேட் தெரியுமா?

துபாய் வெள்ளிக் கோப்பை, தங்கப் பஷ்பம் டீ

Published: 

15 Dec 2024 15:50 PM

தங்கப் பஷ்பம், வெள்ளிக் கோப்பை தேநீர்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷேதா சர்மா என்பவர் சொந்தமாக தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பரிமாறப்படும் தேநீரின் விலை ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த டீ அந்நாட்டின் பண மதிப்பில் 5 ஆயிரம் ஐக்கிய அரபு திர்ஹாம்ஸ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேநீரில் அப்படி என்னதான் உள்ளது? இது ஏன் விவாதப் பொருளாக மாறியது? இந்த தேநீரில் கலக்கப்படும் பொருள்கள் என்ன? விரிவாக பார்க்கலாம்.

இந்திய நாட்டை பூர்விகமாக கொண்டவர் சஷேதா சர்மா. இவர் துபாய் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடையில், ஒரு கப் தேநீரின் விலை ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய அரசு அமீரக நாட்டின் பண மதிப்பான திர்ஹாம்ஸில் ரூ.5 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க : ஒரு நாளுக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிடலாம்!

ஒரு டீயின் விலை ரூ.1 லட்சம்

சர்மா கடையில் விற்கப்படும் இந்த தேநீரின் இந்திய மதிப்பு ரூ.1.14 லட்சம் ஆகும். மேலும், இந்தத் தேநீர் முழுக்க முழுக்க வெள்ளிக் கோப்பையில் வழங்கப்படுகிறது.
இது தவிர தேநீரில் தங்கப் பஷ்பமும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இதில் வழங்கப்படும் தங்க பஷ்பம் மற்றும் வெள்ளிக் கோப்பையை வாடிக்கையாளர்கள் தங்களின் நினைவாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

துபாயில் எங்குள்ளது தெரியுமா?

மேலும், இந்தக் கடையில் பல்வேறு சலுகை விலையில் உணவுகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்தியாவின் பிரபலமான உணவுகள் இங்கு கிடைக்கும் என்றும் ஏன் தெருக்கடை உணவுகள் கூட கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு சிறப்புமிக்க இந்த உணவகமானது, டிஐஎஃப்சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில் அமைந்துள்ளது. உணவகத்தின் பெயர் போஹோ கஃபே ஆகும்.

உணவுகளின் வகைகள்

இதில், இரட்டை விதமான மெனு பொருள்கள் உள்ளன என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த உணவகத்தின் உயர்தர பிரீமியம் பொருட்களில் கோல்ட் சாவனிர் காபி, கோல்ட்-டஸ்ட் குரோசண்ட்ஸ், கோல்ட் டிரிங்க்ஸ் மற்றும் கோல்ட் ஐஸ்கிரீம் ஆகியவை உள்ளன.
இது தொடர்பாக வளைகுடாவின் முன்னணி பத்திரிகையான கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேநீர் கடை உரிமையாளர் பேட்டி

இது குறித்து டீ கடை உரிமையாளர் சர்மா கூறுகையில், ” அனைவருக்குமான உணவு அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். உணவு வழங்கலில் அனைத்து சமூகத்தினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும்” என்றார்.
இந்த உணவகத்தின் ராயல் மெனுவில்தான் இந்த டீ உள்ளது. இந்த டீயின் உள்ளூர் மதிப்பு சுமார் 5 ஆயிரம் திர்ஹாம்ஸ் ஆகும். இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1.14 லட்சமாக வருகிறது.

நெட்டிசன்கள் கேள்வி

எனினும் இந்த தேநீர் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது. ஒரு தேநீரின் விலை ரூ.1 லட்சமா? அப்படி என்னப்பா அதில் இருக்கு? என சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.
இந்த தேநீர் ஆர்டர் செய்த பின்னர் சுங்க அதிகாரிகள் கைது செய்வார்களா? எனவும் சிலர் கேலியாக கேள்வியெழுப்பியுள்ளனர். மற்றொரு பயனர், “எப்போ காபியில் தங்க பஷ்பம் கொடுப்பீர்கள்? எனக்கு சாப்பிடணும் போல இருக்கிறதே எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இவர்கள் காபி குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?

தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உங்கள் குழந்தைகள் புத்திசாலிகளா - தெரிந்துக்கொள்வது எப்படி?
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?