“ஆணுறை அணியாமல் பாலுறவு வைத்தார்” டிரம்ப் குறித்து நடிகை பரபர வாக்குமூலம்!

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து ஆபாச நடிகை வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆணுறை அணியாமல் பாலுறவு வைத்தார் டிரம்ப் குறித்து நடிகை பரபர வாக்குமூலம்!
Updated On: 

09 May 2024 12:25 PM

டொனால்ட் டிரம்ப்:

கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் உடன் பாலுறவு கொண்டதாக நடிகை ஸ்டார்மி டேனியில்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக, இதுகுறித்து வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியிருந்ததார்.

1,30,000 டாலர்கள் (ரூ.1 கோடி) பணத்தை டிரம்ப் தனது வழக்கறிஞர் மூலம்  கொடுத்தாக கூறினார். இந்த நிலையில், வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டில் டிரம்ப் சிக்கினார்.  டிரம்ப் மீதான குற்றவியல் வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பரபரப்பு வாக்குமூலம் அளித்த டேனியல்ஸ்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஆஜரானார். அப்போது, டிரம்புடனான தனது பாலுறவு பற்றிய சில பரபரப்பான தகவல்களை கூறினார் டேனியல்ஸ்.

Also Read : சாதனை படைக்க காத்திருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி.. விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ரத்து!

அதன்படி, ”தன்னை இரவு உணவு சாப்பிடுவதற்காக என்னை டிரம்ப் அழைத்தார். தன்னை புத்திசாலி என்று குறிப்பிட்டார். தனது சக ஊழியர்களுடன் இரவு உணவைத் தவிர்க்க டிரம்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். டிரம்ப் தனது பாதுகாவலரிடம் என்னுடைய  போன் நம்பரை பெற்றுக் கொண்டு என்னை அழைத்தார்” என்று டேனியல்ஸ் கூறினார்.

மேலும், “அவர் டிரம்புடன் நான் பாலுறவு கொள்ளும்போது நிதானமாக இருந்தேன். எனக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. பாலுறவில் ஈடுபடும்போது டிரம்ப் ஆணுறை அணியவில்லை.

“மகள் மாதிரி இருக்க..”

இருப்பினும், டிரம்புடன் பாலுறவு கொண்டேன். டிரம்பும் எதுவும் கூறவில்லை. இதன்பிறகு, எனக்கு உடல் நடுக்கம் ஏற்படுவதாக டிரம்பிடம் கூறியதாவும், இதனால் வெளியே செல்ல விரும்புவதாகவும்” டிரம்பிடம் கூறியதாக நீதிமன்றத்தில் டேனியல்ஸ் தெரிவித்தார்.  மேலும்,  நான் அவரது மகள் போல் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

”2007ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் டிரம்பை சந்தித்தபோது, என்னிடம் பாலுறவு கொள்ள முயற்சித்தார். அந்த நேரத்தில் எனக்கு மாதவிடாய் இருப்பதாக” நான் டிரம்பிடம் கூறியதாக நடிகை டேனியல்ஸ் வாக்குமூலம் அளித்தார். இதனை குற்றச்சாட்டை எல்லாம் தற்போது வரை டிரம்ப் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : திண்டாடும் பொருளாதாரம்..”தயவு செய்து வாங்க..” இந்தியர்களிடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்