Elon Musk : எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய டிரம்ப்!
President Election | அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்துக்கொண்டிருந்த நிலையில், டிரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்தார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் மட்டுமன்றி, டிரம்ப் உடனான மேடை பேச்சுகளிலும் அவர் பங்கேற்றார்.
தான் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால், எலான் மஸ்க்குக்கு அமைச்சர் அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தான் சொன்ன வாக்கை நிறைவேற்றியுள்ளார். அதன்படி, எலான் மஸ்க்குக்கு பதவி வழங்கியுள்ளார் டிரம்ப். எலான் மஸ்குக்கு மட்டுமன்றி, இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமிக்கும் பதவி வழங்கியுள்ளார். இந்த நிலையில், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அரசின் ஒதுக்கப்பட்டுள்ள பதவி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்.. 6 பேர் உயிரிழப்பு
விறுவிறுப்பான நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில், ஜோ பைடன் தலைமையிலான அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய அதிபராக பதவி வகித்த ஜோ பைடனும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜோ பைடன் சந்தித்த கடும் விமர்சனங்கள் மற்றும் சிக்கல்கள் காரணமாக அவர் தேர்தலில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் அப்போதைய துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தார்.
இதையும் படிங்க : Elon Musk : டிரம்ப் வெற்றி எதிரொலி.. அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்
இந்த நிலையில், சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக ஜோ பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, எப்போது ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனாலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமலா. அதுமட்டுமன்றி, எதிர் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் உடனும் அவர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினார். போட்டியாளர்களான கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகியோர் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவாக சில முக்கிய பிரபலங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் சுமார் 295 இடங்களில் வெற்றி பெற்று அதிபரானார் டொனால்ட் டிரம்ப். 226 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை தழுவினார் கமலா ஹாரிஸ்.
இதையும் படிங்க : Donald Trump : டொனால்ட் டிரம்பின் வீட்டை காவல் காக்கும் “Robot Dog”.. எலான் மஸ்கின் அன்பு பரிசா?
டிரம்புக்காக வாக்கு சேகரித்த எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்துக்கொண்டிருந்த நிலையில், டிரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்தார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் மட்டுமன்றி, டிரம்ப் உடனான மேடை பேச்சுகளிலும் அவர் பங்கேற்றார். எலான் மஸ்கின் இந்த ஆதரவுக்கு நன்றி கூறும் விதமாக, தான் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு அமைச்சர் அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகராக பதவி வழங்குவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார் டொனால்ட் டிரம்ப். அதன்படி, எலான் மஸ்க் மற்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.