Donald Trump: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.. பேரணியில் பயங்கரம்.. அமெரிக்காவில் உச்சகட்ட பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். இதனால், டிரம்பிற்கு காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்து. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.

Donald Trump: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.. பேரணியில் பயங்கரம்.. அமெரிக்காவில் உச்சகட்ட பரபரப்பு

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

Updated On: 

14 Jul 2024 07:32 AM

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். துப்பாக்கிச் சூடு பட்டதும் டிரம்ப் கீழே குனிந்து தன்னை தற்காத்துக் கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்பை பத்தரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் வடிய வடிய அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது டிரம்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரம்பிற்கு காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்து. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கப்படும் என்று அமெரிக்க ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது, “பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நான் இப்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். நன்றாகவும் இருக்கிறேன். “பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விரைவான பதிலடி கொடுத்ததற்காக அமெரிக்க ரகசிய சேவை மற்றும் அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நான் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். மிக முக்கியமாக, பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கும், படுகாயமடைந்த மற்றொருவரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Also Read: இங்கு சிரிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்.. ஜப்பானின் புதிய விதி.. முழு விவரம் இதோ!

நம் நாட்டில் இதுபோன்ற செயல் நடப்பது நம்ப முடியாதது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை. அவர் இறந்துவிட்டார். என் வலது காது மேல் பகுதியில் துளையிட்ட தோட்டாவால் நான் சுடப்பட்டேன். நான் பேசும்போது திடீரென கேட்ட ஒரு சத்தம் என் கவனத்தை ஈர்த்தது. என்னவென்று பார்த்தால் என் காதில் சுட்டதால் ரத்தம் வந்தது. இந்த அமெரிக்காவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றார்.

கண்டனம்:

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு தகவல் வந்தது. அவர் பாதுகாப்பாக நலமாகவும் இருக்கிறார். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. நாம் அனைவரும் ஒரு நாடாக இணைந்து இந்த சம்பவத்திற்கு கண்டிக்க வேண்டும்” என்றார்.

முன்னாள் அதிபர் ஒபாமா கூறுகையில், “நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும் முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய காயம் அடையவில்லை என்பதில் நான் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். டிரம்ப் விரையில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

Also Read: வரலாற்றில் நடந்த பெரிய திருட்டு.. மொத்தம் 1000 கார்கள்.. உலகையே அதிர வைத்த நாடு!

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்