Donald Trump Shot: டிரம்பை சுட்டது யார்? அமெரிக்காவை பதறவைத்த மர்ம நபர்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. டிரம்ப் உடல்நிலை நன்றாக இருப்பததாகவும், தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
டிரம்பை சுட்டது யார்? அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டது. டிரம்ப் உடல்நிலை நன்றாக இருப்பததாகவும், தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டிரம்பை சுட்ட நபர் யார்? அவருக்கு டிரம்பிற்கு என்ன பிரச்னை போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. டிரம்ப் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகே இருந்த ஒரு கட்டடத்தின் மேல் இருந்து சுட்டதாகத் தெரிகிறது. டிரம்ப் சுட்டதும் பாதுகாவலர்கள் உடனே பதிலடி தாக்குதல் நடத்தியதில் அந்த நபர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், டிரம்பை சுட்டவரை FBI (Foreign Bureau Investigation) அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக FBI விசாரணை நடத்தி வரும் நிலையில், டிரம்ப்பை சுட்டது யார் என்று அடையாளம் கண்டுபிடித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Also Read: இங்கு சிரிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்.. ஜப்பானின் புதிய விதி.. முழு விவரம் இதோ!
நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி , பென்சில்வேனியாவின் பெத்தேல் பார்க்கைச் சேர்ந்த க்ரூக்ஸ், பட்லரில் பேரணியின் போது டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு தோட்டா டிரம்பின் காதில் பாய்ந்தது. பேரணி நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 முதல் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் மேற்கூரையில் இருந்து டிரம்பை சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாக இல்லை என்றும் FBI கூறியுள்ளது. டிரம்பை சுட்டதுக்கான நோக்க என்ன என்பதை பற்றி விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த கால சம்பவங்கள்:
அமெரிக்காவில் இதுபோன்று நடப்பது முதல்முறை அல்ல. 1963ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தனது வாகன பேரணியின்போது படுகொலை செய்யப்பட்டார். மேலும், 1968ஆம் ஆண்டு அவரது சகோதரர் பாபி கென்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல, 1981ஆம் ஆண்டு அதிபாராக இருந்த ரொனால்ட் ரீகனை கொலை செய்ய முயற்சி நடந்த நிலையல், உயிர் தப்பினார். அமெரிக்காவின் 16வது அதிபரான ஆபிரகாம் லிங்கன் 1865ஆம் ஆண்டு வாஷிங்டனில் நாடகத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார். அவர் தலையின் பின்புறத்தில் சுடப்பட்டு மறுநாள் காலை இறந்தார். கறுப்பின உரிமைகளுக்கான அவரது ஆதரவே அவரது படுகொலைக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.
செப்டம்பர் 6, 1901ஆம் ஆண்டு அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டார். பேரணியில் இருந்தவர்களுடன் கைகுலுக்கியபோது அவர் மார்பில் இரண்டு முறை சுடப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எட்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: டிரம்ப் சுடப்பட்டபோது என்ன நடந்தது? திக் திக் நிமிடங்கள்.. பரபர வீடியோ!