US Election Results 2024: பட்டையை கிளப்பிய ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி!
குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ர்ம்ப் வெற்றி பெற்று 47வது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த அவர் மீண்டும் 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான போட்டியளித்த நிலையில் தோல்வியை தழுவினார்.
டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ர்ம்ப் வெற்றி பெற்று 47வது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த அவர் மீண்டும் 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான போட்டியளித்த நிலையில் தோல்வியை தழுவினார். இந்திய வம்சாவளியும், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அவரது தோல்வி இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 270 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ட்ர்ம்ப் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை பெற்றார். ஆனால் கமலா ஹாரிஸால் 214 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: Kamala Harris: ட்ரம்பை அலறவிட்ட கமலா ஹாரிஸ்.. ஒரே அடியில் உயர்ந்த வாக்கு!
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
அமெரிக்காவின் தற்போதைய அதிபராக ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 5 ஆம் தேதியான நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் முதலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ர்ம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் தான் களம் கண்டனர். ஆனால் பைடனுக்கு கட்சிக்குள் எழுந்த அதிருப்தி, தேர்தல் பரப்புரையில் சொதப்பியது உள்ளிட்ட காரணங்களால் அவர் போட்டியிலிருந்து விலக, துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸூக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
#WATCH | West Palm Beach, Florida | Republican presidential candidate #DonaldTrump says, “…This is a movement that nobody has ever seen before. Frankly, this was, I believe, the greatest political movement of all time. There has never been anything like this in this country and… pic.twitter.com/MEcRDSAI72
— ANI (@ANI) November 6, 2024
வெற்றிக் கொண்டாட்டத்தில் ட்ரம்ப்
இப்படியான நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இது நம் நாடு இதுவரை கண்டிராத மகத்தான அரசியல் வெற்றி, இது போன்ற எதுவும் பார்த்தது இல்லை. உங்கள் 45வது மற்றும் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு குடிமகனுக்காகவும் நான் போராடுவேன். குடும்பம் மற்றும் உங்கள் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நாளும் நான் போராடுவேன். இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read: கிரெடிட் கார்டு மூலம் பங்குச் சந்தையில் முதலீடு.. எப்படி தெரியுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
மேலும் தேர்தல் பரப்புரையின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி, “கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார். அந்த காரணம் நம் நாட்டை காப்பாற்றி அமெரிக்காவை மீண்டும் மகத்துவத்திற்கு கொண்டு வர வேண்டும். அந்த பணியை ஒன்றாக நிறைவேற்றுவோம்” எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். இதனிடையே ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில் இந்திய வம்சாவளி பெண்ணான கைலா வெபரின் கணவரான ஜே.டி.வான்ஸ் துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.
அதேசமயம் அணி மாறும் மாகாணங்கள் என அறியப்படும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் கிடைத்த வாக்குகளே ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்கா வரலாற்றில் இதுவரை பெண் ஆளுமைகள் யாரும் அதிபராக வந்ததில்லை. 2017 ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போது கமலா ஹாரிஸையும் வீழ்த்தி அசால்ட் செய்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.