5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Israel Iran War: “இஸ்ரேலுக்கு உதவினால் அவ்வளவுதான்” அரபு நாடுகளுக்கு ஈரான் வார்னிங்!

இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Israel Iran War: “இஸ்ரேலுக்கு உதவினால் அவ்வளவுதான்” அரபு நாடுகளுக்கு ஈரான் வார்னிங்!
இஸ்ரேல் ஈரான் போர் Picture credit: Getty/PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 14:46 PM

இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா,   துணைத் தலைவர் நபீல்  கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.

எச்சரிக்கை விடுத்த ஈரான்:

இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது. ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை கடந்த 3ஆம்  தேதி நடத்தியது.

இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்கு பிறகு தற்போதைய பிரதமர் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளார்.

Also Read: லெபனானில் உச்சக்கட்ட பதற்றம்.. ஆபத்தில் 600 ராணுவ வீரர்கள்… இந்தியா கவலை!

இதனால் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும். இந்த நிலையில் தான் ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு உதவ விரும்பினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் கூறியுள்ளது.

இஸ்ரேல் அமைதியாக இருக்க காரணம் என்ன?

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளை குறிவைத்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான். இந்த நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் உள்ளதால் அந்த நாடுகளுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 12 நாட்கள் ஆகும் நிலையில், எந்த ஒரு தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தவில்லை.

ஈரான் இஸ்ரேல் போர் தன் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் எப்போது பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைத்தான் ஒட்டுமொத்த உலகம் உற்று கவனித்து வருகிறது. இஸ்ரேல் அமைதி காத்து வரும் நிலையில், ஈரான் தனது முக்கியமான இராணுவ மற்றும் அணு ஆயுத தளங்களை பாதுகாக்க வலுவான வான் பாதுகாப்பு அமைப்பை தயார் செய்துள்ளது.

ரஷ்ய தயாரிப்பான S-300, SA-22 மற்றும் உள்நாட்டு ‘Khordad’ மற்றும் ‘Bawar 373’ போன்ற நவீன அமைப்புகளும் இதில் அடங்கும். இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன், ஈரானின் வான்வெளி மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, இது இஸ்ரேலுக்கு வான்வழித் தாக்குதல்களை சவாலாக ஆக்குகிறது.

ஈரானின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், நவீன போர் விமானங்களுக்கு குறைவாக இருப்பது தான். ஈரானின் பெரும்பாலான போர் விமானங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை. இஸ்ரேலின் அதிநவீன விமானங்களைத் தாங்கும் திறன் ஈரானுக்கு இல்லை.

அமெரிக்காவின் நிலைப்பாடு:

இந்த பலவீனம் இஸ்ரேலுக்கு ஈரானின் வான்வெளியில் ஊடுருவ ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.  இப்படியாக இருக்கும் நிலையில், தாக்குதலுக்கு துல்லியமான வியூகத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Also Read: “போர் களத்துல பிரச்னைக்கு தீர்வு காண முடியாது” தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் பேச்சு!

இது எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் அமெரிக்கா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், ஈரானின் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில் தான் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

 

Latest News