Congo : தீயாக பரவும் மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.. காங்கோவில் என்ன நடக்கிறது?

Strange Disease | காங்கோவில் தற்போது பரவி வரும் இந்த மர்ம நோய்க்கு தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகளே தென்பட்டாலும், அதன் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

Congo : தீயாக பரவும் மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.. காங்கோவில் என்ன நடக்கிறது?

மாதிரி புகைப்படம்

Published: 

15 Dec 2024 10:32 AM

காங்கோ இதுவரை இல்லாத கடும் சவாலை சந்தித்து வருகிறது. அதாவது, அங்கு மர்ம நோய் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் வைரஸ் குறித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து காங்கோவில் தற்போது மர்ம நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த மர்ம நோய் குறித்து கூறும் அதிகாரிகள், காங்கோவில் பரவும் இந்த மர்ம நோய் கடந்த அக்டோபர் மாதம் முதல் பரவ தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில், காங்கோவில் என்ன நடக்கிறது, அதன் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்

காங்கோவில், கோமா என்னும் பகுதியில் மர்ம நோய் பரவி வருகிறது. இந்த நோய், சாதாரன காய்சலுக்கான அறிகுறிகளை கொண்டு இருந்தாலும், மிகவும் ஆபத்தானதாக உள்ளது. குறிப்பாக இந்த நோய் குழந்தைகளை அதிகம் குறி வைப்பதாக கூறப்படுகிறது. அதாவது காங்கோவில் இந்த மர்ம நோயால் குழந்தைகளே அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கும் நபர்கள் 7.6 சதவீதம் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கோவின் இந்த கடுமையான நிலையை கருத்தில் கொண்டு, அங்கு நிலமையை கட்டுக்குள் கொண்டுவரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதலே அங்கு இந்த மர்ம நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், அது தெரிய வருவதற்கே ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

இதையும் படிங்க : Mark Zuckerberg : அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மார்க் ஜூக்கர்பெர்க்!

மர்ம நோய் குறித்த தகவல்களை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு

காங்கோவில் மர்ம நோயின் தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் உலக சுகாதார அமைப்பு சில முக்கிய தகவல்களை வெளியிட்டது. அதாவது, காங்கோவில் அதுவரை சுமார் 416 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த மர்ம காய்ச்சல் மற்ற காய்சல்களை போல அறிகுறிகளை கொண்டிருந்தாலும், இந்த மர்ம நோய் தாக்கி உயிரிழந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிலர் கடும் மூச்சுத்திணறல் காரணமாக அவதி அடைந்ததாக காங்கோவின் சுகாதாரத்துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறியுள்ளார். இந்த மர்ம நோய் குறித்து சோதனை செய்யப்பட்ட சில மாதிரிகள், அவை கொசுக்களால் பரவும் வைரஸ் என்று கண்டறியப்பட்டாலும் இந்த மர்ம நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

இதையும் படிங்க : Government Holiday : இனி வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை.. டோக்கியோ எடுத்த அதிரடி முடிவு.. காரணம் இதுதான்!

மர்ம நோய் குறித்து அமைச்சர் கூறியது என்ன?

இந்த மர்ம நோய்க்கு சத்து குறைபாடு, ரத்த சோகை, ஏதேனும் நோய் அல்லது கிருமிகள் காரணமா என்பது இந்த நோய் குறித்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு முடிவில் தான் தெரிய வரும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபம் வரும்போது அழுகை வருவது ஏன் - அறிவியல் கூறுவது என்ன?
எந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கக்கூடாது..?
அதிகளவில் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்