5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

244 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர்.. விடாமல் துரத்திய விதியால் உயிரிழந்த சோகம்..

2017 ஆம் ஆண்டு ட்ரூ கோன் தனது 22 வது பிறந்த நாளை கொண்டாட இருந்தார். அப்போது புளோரிடாவின் ஜாக்சன் லே என்ற பகுதியில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மூலை ரத்த உரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

244 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர்.. விடாமல் துரத்திய விதியால் உயிரிழந்த சோகம்..
ட்ரூ கோன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Aug 2024 19:17 PM

கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர் உயிரிழப்பு: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 30 வயதான ட்ரூ கோன். இவர் கடந்த 244 நாட்களாக கோமாவில் இருந்தார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் மருத்துவர்களின் கூற்றை தகர்த்து அவர் கோமாவில் இருந்து மீண்டு வந்தார். இது மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும் விதி வலியது என்பதற்கு ஏற்ப, ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 2017 ஆம் ஆண்டு ட்ரூ கோன் தனது 22 வது பிறந்த நாளை கொண்டாட இருந்தார். அப்போது புளோரிடாவின் ஜாக்சன் லே என்ற பகுதியில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மூலை ரத்த உரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் நுரையீரலில் துளை ஏற்பட்டுள்ளதாகவும், இடுப்பு மற்றும் விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: உலக தாய்ப்பால் வாரம்: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் உயர்ந்துள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

மருத்துவர்கள் இனி இவர் பிழைக்கமாட்டார் எனவே கருதினர். கோமா நிலையில், மூளைச் சாவு அடைந்ததால் உடல் உறுப்புகளை தானமாக அளித்துவிடுங்கள் எனக் மருத்துவர்கள் ட்ரூ கோனின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்த ட்ரூ கோன், 244 நாட்களுக்கு பின் ஒரு நாள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது கோமா நிலையில் இருந்து மீண்டார்.

இனி இவர் பிழைக்கவே மாட்டார் என கருதப்பட்ட நிலையில் ட்ரூ கோன் அனைத்தையும் முறியடித்து மீண்டு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். இது மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் விதி யாரை விட்டது என்பதற்கேற்ப கடந்த சில நாட்களுக்கு முன் அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படிக்க: மொட்டை மாடியில் பழைய பொருட்களா? – காத்திருக்கும் ஆபத்து!

சமீபத்தில் தனது 30 வது பிறந்தநாளை ட்ரூ கோன் கொண்டாடினார். ஜூலை 26 ஆம் தேதி, 2017 ஆம் ஆண்டு அவர் சென்ற அதே ஜாக்சன் லே பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ட்ரக் ஒன்று அவர் மீது மோதியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 244 நாட்களுக்கு பின் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர் மீண்டும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News