ஸ்பெயினில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்.. 205 பேர் உயிரிழந்த சோகம்..
குளிர்ந்த காற்றும், அனல் காற்றும் இணைந்து வீசுவதே வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டும் இணைந்து அடர்த்தியான மேகங்கள் உருவாகி கனமழையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஸ்பானிஷ் மொழியில் டானா என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக உலக நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டுள்ள மழை, அழிவு சம்பவங்களுக்கு இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய சாலைகள், குப்பைகள் மற்றும் சேறுகளால் நிரப்பப்பட்ட நகரங்கள், மிதக்கும் வாகனங்கள்… இது போன்ற மோசமான நிலைமைகள் தற்போது ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் காணாமல் போயுள்ளனர். கிழக்கு ஸ்பெயினில் உள்ள வலென்சியா நகரை வெள்ளம் அதிகம் பாதித்துள்ளது. எட்டு மணி நேரத்தில் இங்கு 12 அங்குல மழை பெய்துள்ளது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை தற்போது பெய்துள்ளது. வலென்சியா மத்தியதரைக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் இதுவரை 200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 1973-ம் ஆண்டு ஸ்பெயினில் இதுபோன்ற கனமழை பதிவானது. அதாவது 50 ஆண்டுகளுக்கு பின் இவ்வளவு மழை பதிவாகியுள்ளது. அதற்குள் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். 1957-ம் ஆண்டு வாலென்சியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்தனர்.
Also Read: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு.. குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு..
மழைக்கான காரணம் என்ன?
குளிர்ந்த காற்றும், அனல் காற்றும் இணைந்து வீசுவதே வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டும் இணைந்து அடர்த்தியான மேகங்கள் உருவாகி கனமழையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஸ்பானிஷ் மொழியில் டானா என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக உலக நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டுள்ள மழை, அழிவு சம்பவங்களுக்கு இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மத்தியதரைக் கடலின் வெப்பமும் கனமழைக்கு காரணமாக அமைந்தது. எனவே, அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஸ்பெயின் இத்தகைய சம்பவங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. வெப்பம், ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றின் கலவையானது புயல் மேகங்கள் மற்றும் பலத்த மழைக்கு காரணமாகும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்தியதரைக் கடலின் வெப்பநிலை 28.47 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலையாகும். உலக வானிலை அட்ரிபியூஷன் முன்முயற்சியின் விஞ்ஞானிகளும் இதற்குக் காலநிலை மாற்றத்தைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
#Spain
Spain is currently facing one of its deadliest flooding disasters in decades. Heavy rains in Valencia and surrounding regions brought flash floods, killing at least 205 people, with more fatalities expected as searches continue. #SpainFlood pic.twitter.com/gEaZF3r2Zz— Monu kumar (@ganga_wasi) November 1, 2024
சப்னேவின் நிலைமை மோசமடைந்ததற்கு நிர்வாகத்தின் அலட்சியமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தகவல்களின்படி, எச்சரிக்கையை வழங்கிய நேரம் குறித்து பலர் கேள்வி எழுப்பினர். ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட் 12 மணி நேரத்திற்குப் பிறகு, எங்காவது தஞ்சம் அடைவதைப் பற்றி சிந்திக்க மிகவும் தாமதமாகிவிட்டது என்று மக்கள் கூறுகிறார்கள். உயரமான இடங்களுக்குச் செல்லவோ, சாலைகளை விட்டு நகரவோ முடியவில்லை. திடீர் வெள்ளத்தில் பலரும் வீடுகளை இழந்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள்:
வலென்சியா பகுதியில் 500 ஸ்பெயின் வீரர்கள் இந்த மீட்பு பணியில் இணைந்துள்ளதாக ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே மக்கள் அங்கு செல்ல முடியும். ஸ்பெயின் அரசாங்கம் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அல்லது உயரமான நிலத்தைத் தேடுமாறும் அவசர எச்சரிக்கையை அனுப்பியது. ஸ்பெயினின் வானிலை ஆய்வு நிறுவனமான AEMET படி, வலென்சியா உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்திற்குள் 200 மிமீ (8 அங்குலம்) மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.