5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

Richest man in the world | எலான் மஸ்க் உலகின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் சொந்தக்காரராக இருக்கும் நிலையில், அவர் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான அரசு முடிவுறும் தருவாயில் இருந்த நிலையில், அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!
எலான் மஸ்க்
vinalin
Vinalin Sweety | Updated On: 14 Dec 2024 08:14 AM

கடந்த பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக வளம் வருபவர் எலான் மஸ்க். இந்த நிலையில், மஸ்க் தனது சொத்து மதிப்பு மூலம் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.37 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே, எலான் மஸ்கின் சொத்துக்கள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தற்போது அது ரூ.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்ற பட்டத்துடன் ஒரு படி மேலே சென்றுள்ளார் மஸ்க். இந்த நிலையில், எலான் மஸ்கின் இந்த சொத்து மதிப்பு உயர்வு குறித்தும், அவரின் தற்போதைய சொத்து விவரங்கள் குறித்தும் விரிவா பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ramachandra Aggarwal : அன்று கடனில் தொடங்கிய தொழில்.. இன்று ரூ.2,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த ராமச்சந்திர அகர்வால்?

யார் இந்த உலக பணக்காரர் எலான் மஸ்க்?

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், சமூக ஊடகமான எக்ஸ் உள்ளிட்ட உலகின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர் தான் எலான் மஸ்க். கார்கள் முதல் விமானங்கள், ராக்கெட் என பல்வேறு சாதனைகளை எலான் மஸ்கின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றிய நிலையில், அதுவும் தற்போது எலான் மஸ்குக்கு கூடுதல் ஆதரவாக அமைந்துள்ளது. எலான் மஸ்க் எப்போதும் வித்தியாசமான செயல்களை செய்வதில் ஆர்வம் மிக்கவராக உள்ளார். அவரின் படைப்புகள், தேடல்கள் மற்றும் ஆய்வுகளை அதற்கு ஒரு சான்று. செயற்கை நுண்ணறிவு, மனித ரோபோக்கள் என எலான் மஸ்க் தற்போது பல ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது, தனது ஸ்டார்லிங் தொலைத்தொடர்பு நிறுவனம் மூலமாக அவர் இந்தியாவில் தொழிலை தொடங்க உள்ளார். இதற்கான பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : Post Office : போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்யலாம்!

டிரம்பின் ஆதரவாளராக செயல்படும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் உலகின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் சொந்தக்காரராக இருக்கும் நிலையில், அவர் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான அரசு முடிவுறும் தருவாயில் இருந்த நிலையில், அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று எலான் மஸ்க் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி டிரப்பை வெற்றி பெற செய்யும் வகையில், அவர் பல வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கினார். மேலும், டிரம்பின் வெற்றிக்காக அவர் ஏராளமான பணத்தை செலவு செய்தார்.

இதையும் படிங்க : Savings Account : சேமிப்பு கணக்கு.. இவ்வளவு தொகை தான் டெபாசிட் செய்ய வேண்டும்.. மீறினால் அபராதம்!

இந்த நிலையில், அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக டிரம்பின் வெற்றியை தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கனிசமாக உயர்ந்து வருகிறது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலை தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்புகள் சுமார் 65 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளன. அதன்படி, எலான் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 477 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி. இந்த சொத்து மதிப்பு உயர்வு காரணமாக, 400 பில்லியம் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் பணக்காரர் என்ற பெறுமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News