30 நிமிடத்தில் அமெரிக்கா டூ டெல்லி பயணம்.. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் தெரியுமா?
Delhi to San Francisco in 30 minutes: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து டெல்லிக்கு 30 நிமிடத்தில் வந்து சேரலாம். இந்த அசத்தல் திட்டம் தற்போது தயாராகிவருகிறது. இதனை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Delhi to San Francisco in 30 minutes: உலகின் பணக்காரர்களுள் ஒருவரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். இந்தப் புதிய திட்டத்தின்படி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அல்லது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து டெல்லிக்கு 30 நிமிடங்களில் வர முடியும். ஆம்.. இந்தப் பயணம் விரைவில் சாத்தியமாக உள்ளது. இப்படி ஓர் திட்டத்தை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள எலான் மஸ்க், “ஆம். இது நடைமுறைக்கு வரும் திட்டம்தான்; விரைவில் சாத்தியம் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது பயண விரும்பிகளிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ட்விட்டர் பயனர் கேள்வி- எலான் மஸ்க் பதில்
முன்னதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், “பூமியின் எந்தவொரு நகரில் இருந்தும் மற்றொரு நகருக்கு 1 மணி நேரத்துக்குள் பயணிக்க முடியுமா?” எனக் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “தற்போது இது சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.
அதன்படி, இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டோரண்டோவுக்கு 24 நிமிடங்களிலும், நியூயார்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு 29 நிமிடங்களிலும், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து டெல்லிக்கு 30 நிமிடங்களிலும் செல்ல முடியும்.
இதையும் படிங்க : Elon Musk : எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பதவி.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய டிரம்ப்!
1,000 பயணிகள் வரை பயணம்
இதற்காக பிரத்யேக விமானம் தயாரிக்கப்படுகிறது. இது, லோ-கிராவிட்டி ஆக இருக்கும். மேலும், இந்த ஸ்டார்ஷிப் விமானம் 395 அடி இருக்கும் எனவும் இதில் 1,000 பயணிகள் வரை பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே எலான் மஸ்கின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் முதலில் அறிவித்து, திட்டத்தை தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், பல்வேறு பயணிகள் எலான் மஸ்க்கின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அப்போது அவர், “அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினரை விரும்புகிறது. எலான் மஸ்கின் முயற்சிக்கு வாழ்த்துகள். அமெரிக்கா மீண்டும் எழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்- விவேக் ராமசாமி கூட்டணி
மற்றொரு பயணம், இது ஓர் அற்புதமான திட்டம். இந்தத் திட்டம் வெற்றியடைய வேண்டும். எதிர்கால திட்டங்கள் தான் மனித இனத்துக்கு தேவை. என்னிடம் சில யோசனைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசின் செயல்திறன் துறையில் தலைமை வகிப்பார்கள் எனத் தெரிவித்து இருந்தார்.
ஸ்பேக்ஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப்
இதற்கிடையில், ஸ்பேஸ்எக்ஸ் தனது அடுத்த ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இந்தச் சோதனையானது, நவ.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், இந்தச் சோதனை நிகழ்வு ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
அதாவது, நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் தளத்தில் இருந்து தெற்கு டெக்சாஸ், போகா சிகா கடற்கரைக்கு அருகில் இந்தச் சோதனை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தச் சோதைன ஓட்டத்தை உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் நேரலையில் பார்வையிடலாம். மேலும் தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Donald Trump: டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெற போகும் முக்கிய நபர்கள்.. வெளியான லிஸ்ட் இதோ