5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Chocolate Day Celebration : யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவு வைரலானதை அடுத்து ஏராளமான பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில்  வைரலாகும் வீடியோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 08 Jul 2024 17:10 PM

யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி : உலகம் என்னதான் வேகமாக முன்னேறிக்கொண்டு சென்றாலும் கூட பூமியில் விடை தெரியாமல் புரியாத புதிராக பல அதிசயங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்கும் நோக்கில் தான் விண்வெளி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பலவற்றில் வெற்றியும் கிடைத்துள்ளன. ஆனால் யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி ஒரு வித்தியாசமான செயலை செய்துள்ளது. தற்போது அது தான் இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. கடந்த ஜூலை 7 ஆம் தேதி யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சியின் விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடி அதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.

உலக சாக்லேட் தினம்

ஆண்டுதோறும் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி விண்வெளி ஆராய்ச்சியளர்கள் விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடியுள்ளனர். இது குறித்து யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் படி, விண்வெளி ஆராய்சியாளர்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் மீது சாக்லேட்டை ஊற்றி சாப்பிட்டு உலக சாக்லேட் தினத்தை கொண்டாடியுள்ளனர். ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள சாக்லேட் கலந்த ஸ்ட்ராபெர்ரி  பறந்து செல்லும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமன்றி பிஸ்கெட்டுகள் மற்றும் சாக்லெட்டை வைத்து ஒரு சிறிய வீட்டையும் அவர்கள் கட்டியுள்ளனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

அதுமட்டுமன்றி யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சியின் பதிவின் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், விண்வெளியில் இவ்வளவு கொண்டாட்டங்கள் இருக்கும் என நான் நினைத்துக்கூட பார்தததில்லை. பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

வீடியோவின் கீழ் பதிவிட்டுள்ள மற்றொருவர் உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏதேனும் ஏற்படாதா. ஏனென்றால் தரையில் நின்றுக்கொண்டு தண்ணீர் குடிக்கும்போதே எனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வது போல் இருக்கும். ஆனால் நீங்கள் எந்த வித கவலையும் இல்லாமல் சாக்லேட் சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்.. தீவிர ஆராய்ச்சியில் இறங்கிறய விஞ்ஞானிகள்!

முன்னதாக இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மீன் குழம்பு எடுத்துச் சென்ற நிலையில், தற்போது யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி விஞ்ஞானிகள் சாக்லேட் தினத்தை கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சிலர் கிண்டலாகவும், சிலர் ஆச்சர்யமாகவும் பல கேள்விகளையும் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News