Attack on Trump : டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி.. பரபரப்பில் அமெரிக்க அரசியல் களம்!
America Election | அமெரிக்காவில் வரும் நபம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரண்டாவது முறையாக டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டிரம்ப் மீது இந்த தாக்குதலை நடத்தியது யார், டிரம்பின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Triple Centuries: டெஸ்டில் அதிவேக டிரிபிள் சதம் அடித்த டாப் 5 வீரர்கள்.. இந்த பட்டியலில் 2 இந்தியர்களும் சாதனை படைப்பு!
கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. புளோரிடாவில் உள்ள தனது கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்த போது அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து அவர் தப்பித்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக கூறபப்டுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து வெளியான தகவல்
டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து வெளியான தகவலின்படி, புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அம்ரிக்க ரகசிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது டிரம்ப் சுமார் 455 மீட்டர் தொலைவில் இருந்ததால் எந்த வித ஆபத்தும் இன்றி உயிர் தப்பியதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடத்தப்பட்ட இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Night Shift: இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களே உஷார்! இப்படியான உடல்நலப்பிரச்னை வரலாம்!
உடல் நலம் குறித்து மெயில் அனுப்பிய டிரம்ப்
இந்த தாக்குதலுக்கு பிறகு தான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளதாக இ மெயில் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், எதுவும் எனது வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. நான் ஒருபோது சரணடைய மாட்டேன் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தாக்குதல்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். துப்பாக்கிச் சூடு பட்டதும் டிரம்ப் கீழே குனிந்து தன்னை தற்காத்துக் கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்பை பத்தரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் வடிய வடிய அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் அபோது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு – எங்கள் கொள்கை” – முதலமைச்சரை சந்தித்த பின் பேசிய திருமாவளவன்..
அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் வரும் நபம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அமெரிக்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் களமிறங்கிய நிலையில் வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவற்றை தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பைடன், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். பைடனின் முன்மொழி படியே கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.