Russia : இனி ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்!
Visa Free Entry | உலக அளவில் சில நாடுகள் இந்தியாவுக்கு விசா இலக்கு வழங்கியுள்ள நிலையில், ரஷ்யாவும் அதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியர்களுக்கு ரஷ்யா செல்ல விசா இலக்கு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
![Russia : இனி ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்! Russia : இனி ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்!](https://images.tamiltv9.com/uploads/2024/12/Visa-Free.jpg?w=1280)
இந்தியர்கள் ரஷ்யாவுக்கு தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அதிக அளவில் பயணம் செய்கின்றனர். மேலும் சிலர் சுற்றுலாவுக்காகவும் உயர் கல்விக்காகவும் ரஷ்யா செல்கின்றனர். இவ்வாறு ரஷ்யாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட சற்று அதிகமாக உள்ள நிலையில், இந்தியர்களை ரஷ்யாவுக்குள் விசா இல்லாமல் அனுமதிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியர்களை விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : Ukraine Russia War: ஸ்கூட்டரில் பதுக்கப்பட்ட வெடிக்குண்டு வெடிப்பு.. ரஷ்ய ஜெனரல் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
தீவிர ஆலோசனை மேற்கொள்ளும் ரஷ்யா
பொதுவாக மக்கள் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாடுகளுக்கு பல தேவைகள் மற்றும் காரணங்களுக்காக பயணிக்கின்றனர். அவ்வாறு மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிக்க விசா கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, விசா இல்லாமல் பயணிப்பது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாக உள்ளது. எனவே, வெளி நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் விசா வைத்திருப்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு வரும் இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிப்பது குறித்து ரஷ்யா தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : 2025ல் நடக்கப்போவது என்ன? நடுங்க வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்!
விசா பெறும் நடைமுறை ரத்து?
இந்தியர்கள் ரஷ்யாவில் நுழைவதற்கும், அங்கு தங்குவதற்கும் அந்த நாட்டின் தூதரக்கத்தில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு, தூதரகத்தில் இந்தியர்கள் விசா பெறுவது மிகவும் நீண்ட நடைமுறையாக உள்ளது. எனவே, இந்த நீண்ட நடைமுறையை ரத்து செய்து பயணத்தை எளிதாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறாப்படுகிறது. ஏற்கனவே சீனா மற்றும் ஈரான் நாட்டினருக்கு விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Congo : தீயாக பரவும் மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.. காங்கோவில் என்ன நடக்கிறது?
சுற்றுலா நிர்வாக குழுத் தலைவர் கூறியது என்ன
இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் செல்வது குறித்து மாஸ்கோ சுற்றுலா நிர்வாகக் குழுத் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது, இந்தியர்களை ரஷ்யாவுக்குள் விசா இல்லாமல் பயணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் தயாராகி வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அது அமலுக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![Ration Shop Holidays: 2025ம் ஆண்டு ரேசன் கடைகளுக்கு பொது விடுமுறை எப்போது..? வெளியான முழு பட்டியல்! Ration Shop Holidays: 2025ம் ஆண்டு ரேசன் கடைகளுக்கு பொது விடுமுறை எப்போது..? வெளியான முழு பட்டியல்!...](https://images.tamiltv9.com/uploads/2024/12/ration-shops-in-tamilnadu.jpg?w=280&ar=16:9)
![EPFO : இனி பிஎஃப் பணத்திற்கு காத்திருக்க தேவையில்லை.. விரைவில் Self Approval அம்சத்தை அறிமுகம் செய்யும் இபிஎஃப்ஓ! EPFO : இனி பிஎஃப் பணத்திற்கு காத்திருக்க தேவையில்லை.. விரைவில் Self Approval அம்சத்தை அறிமுகம் செய்யும் இபிஎஃப்ஓ!...](https://images.tamiltv9.com/uploads/2024/12/EPFO-1-1.jpg?w=280&ar=16:9)
![Bank Loan : உங்களுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதா.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்! Bank Loan : உங்களுக்கு வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதா.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்!...](https://images.tamiltv9.com/uploads/2024/12/Bank-Loan.jpg?w=280&ar=16:9)
![சென்னையில் நாட்டின் முதல் நீரிழிவு உயிரி வங்கி.. இதன் சிறப்புகள் என்ன? சென்னையில் நாட்டின் முதல் நீரிழிவு உயிரி வங்கி.. இதன் சிறப்புகள் என்ன?...](https://images.tamiltv9.com/uploads/2024/12/first-diabetes-biobank-in-Chennai.jpg?w=280&ar=16:9)