Germany Visa: இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஜெர்மனி போக தயாராகுங்க.. நல்ல செய்தி சொன்ன பிரதமர்!

ஜெர்மனி விசா: டெல்லியில் நடந்த 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். கனடாவில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைப்பதாக அந்நாட்டு அரசு கூறிய நிலையில், ஜெர்மனி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Germany Visa: இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஜெர்மனி போக தயாராகுங்க.. நல்ல செய்தி சொன்ன பிரதமர்!

பிரதமர் மோடி (picture credit: PTI)

Updated On: 

25 Oct 2024 19:10 PM

டெல்லியில் நடந்த 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். கனடாவில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைப்பதாக அந்நாட்டு அரசு கூறிய நிலையில், ஜெர்மனி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியாவில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இந்தியர்கள் படித்தும், வேலை செய்தும் வருகின்றனர்.

இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்

இதனால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இதற்கிடையில் தற்போது இந்திய – கனடா இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனால் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை குறைப்பதாக கனடா அரசு அறிவித்தது.

இதனால், இந்தியர்களுக்கு பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் பிரதமர் மோடி இந்தியர்களுக்கு புதிய அறிவிப்பு கூறியுள்ளார். அதாவது,  திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்பு ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் ஆழமாகி வருகிறது. இந்தியா-ஜெர்மனி இடையேயான நட்பு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read: வளர்ப்பு நாய், சமையல்காரர்களுக்கு சொத்தில் பங்கு.. ரத்தன் டாடாவின் வியக்க வைக்கும் உயில்!

நல்ல செய்தி சொன்ன பிரதமர்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்த உறவு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவுக்கான வரைபடத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இரண்டு வலுவான ஜனநாயக நாடுகளும், முன்னணி பொருளாதாரங்களும் உலக நலனுக்காக எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை விளக்கும் வகையில் ஃபோகஸ் ஆன் இந்தியா எனும் ஆவணத்தை ஜெர்மன் அமைச்சரவை வெளியிட்டதை நான் வரவேற்கிறேன்.

ஃபோகஸ் ஆன் இந்தியா ஆவணம் என்பது உலகின் இரண்டு வலுவான ஜனநாயகங்கள், உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்கள் ஒன்றாக எவ்வாறு ஒரு சக்தியாக மாறும் என்பதற்கான வரைபடமாகும். உலகளாவிய நன்மையை இது தெளிவாக பிரதிபலிக்கிறது.

Also Read: தலித்களுக்கு நேர்ந்த கொடூரம்.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை.. கொதித்தெழுந்த நீதிமன்றம்

விசா எண்ணிக்கை உயர்வு

திறமையான இந்தியர்களுக்கான விசாக்களை அதிகரிக்கும் ஜெர்மனியின் முடிவு செய்துள்ளது. இந்த அந்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். திறமையான இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசா எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரமாக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

இது ஜெர்மனியின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். எங்கள் பரஸ்பர வர்த்தகம் 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது. நூற்றுக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களும் ஜெர்மனியில் தங்கள் இருப்பை வேகமாக அதிகரித்து வருகின்றன. இன்று, இந்தியா மிகப்பெரிய மையமாக மாறி வருகிறது. இந்தியா உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தியின் மையமாக மாறி வருகிறது. இதுவே மேக் இன் இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே குற்றச்சாட்டி இருந்தார். இது விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் இந்திய கனடா இடையே கருத்து மோதல் நிலவுகிறது. இந்த சூழலில், கனடா அரசு வெளிநாட்டினரை குறைக்கப்போவது அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?