5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jeshoreshwari Kali Temple: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!

சில வேலைகளை எல்லாம் செய்துவிட்டு திரும்பி வந்தபோது கோயிலில் பார்த்தபோது காளியின் தங்க கிரீடம் இல்லாமல் இருப்பதைக் கண்டு ரேகா சர்க்கார் திடுக்கிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே கிரீடம் காணாமல் போன விவகாரம் பொதுமக்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கிரீடம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeshoreshwari Kali Temple: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!
கிரீடம் திருடப்படும் சிசிடிவி காட்சி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Oct 2024 12:22 PM

கிரீடம் திருட்டு: வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் காளி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது வடமாநிலங்களில் துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் அண்டை நாடான வங்கதேசத்திலும்  துர்கா பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு 4 நாட்கள் அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டின் புகழ்பெற்ற ஜெஷோரேஸ்வரி காளி அம்மன் கோயிலின் தங்க கிரீடம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தங்க கிரீடம் நேற்று  திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு வங்கதேசம் சென்றிருந்தபோது அந்த நாட்டுக்கு  பரிசாக வழங்கினார்.

Also Read: Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

இந்த திருட்டு சம்பவம் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  அதில் ஒரு வாலிபர் தங்க கிரீடத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது . ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் திருட்டுச் சம்பவம் நேற்று (அக்டோபர் 10) மதியம் 2.47 மணி முதல் 2.50 மணிக்குள் நடந்ததாக சொல்லப்படுகிறது. கோவிலின் அர்ச்சகராக உள்ள திலீப் குமார் பானர்ஜி வழக்கம்போல தினசரி பூஜையை முடித்த பின்னர் கோயிலின் சாவிகள் அதன் பராமரிப்புப் பொறுப்பாளராக உள்ள ரேகா சர்க்காரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் சில வேலைகளை எல்லாம் செய்துவிட்டு திரும்பி வந்தபோது கோயிலில் பார்த்தபோது காளியின் தங்க கிரீடம் இல்லாமல் இருப்பதைக் கண்டு ரேகா சர்க்கார் திடுக்கிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே கிரீடம் காணாமல் போன விவகாரம் பொதுமக்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கிரீடம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Bigg Boss Tamil Season 8: மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

இதுதொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது சமூக ஊடகப்பக்கத்தில் .  “2வது கொரோனா தொற்றுக்குப் பின்  2021 ஆம் ஆண்டு ஜெஷோரேஸ்வரி காளி கோவிலுக்கு (சத்கிரா) பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருடப்பட்ட செய்திகளைப் பார்த்தோம். இதற்கு நாங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறோம் மற்றும் திருட்டை விசாரிக்கவும், கிரீடத்தை மீட்டெடுக்கவும் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வங்கதேச அரசை வலியுறுத்துகிறோம்” என  தெரிவித்துள்ளது.

Also Read: Vettaiyan: அரசு பள்ளி குறித்து சர்ச்சை வாசகம்.. வேட்டையன் இயக்குநர் மீது போலீசில் புகார்!

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  கோயில் நிர்வாகம் காவல்துறையில் புகாரளித்தது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கிய பரிசு திருடப்பட்டதை அடுத்து, அதைக் கண்டுபிடிக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம் என்று காவல் நிலைய அதிகாரி ஃபக்கீர் தைசூர் ரஹ்மான் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். விரைவில் குற்றவாளியை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை பல்வேறு வகையான ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

51 சக்தி பீடங்களில் ஒன்று ஜெஷோரேஸ்வரி கோவில்


கிரீடம் காணாமல் போன ஜெஷோரேஸ்வரி காளி அம்மன் கோயில் வங்கதேசத்தில் உள்ள  51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கிரீடம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட்டிருந்தது. காளியம்மனுக்கு அழகாக இந்த கிரீடம் பொருந்தியதாக மோடி வழங்கியபோது அந்நாட்டு மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.  வங்கதேச நாட்டில் துர்கா பூஜை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நேரத்தில், இந்த கிரீடம் திருடப்படுவது சாதாரண விஷயமாக கடந்து போக முடியவில்லை என  பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Latest News