Hajj Pilgrims: ”அதீத வெப்பம்” ஹஜ் யாத்திரை சென்ற 1,300 பேர் உயிரிழப்பு! - Tamil News | | TV9 Tamil

Hajj Pilgrims: ”அதீத வெப்பம்” ஹஜ் யாத்திரை சென்ற 1,300 பேர் உயிரிழப்பு!

Published: 

24 Jun 2024 08:08 AM

இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்று ஹஜ். ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சவூ அரேபியாவின் மக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வருகை தருகிறார்கள். இந்தியாவில் தனியார் பயண நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் இந்தியா ஹஜ் கமிட்டி ஹஜ் பயணத்துக்கு மக்களை அழைத்து சென்று வருகிறது.

Hajj Pilgrims: ”அதீத வெப்பம் ஹஜ் யாத்திரை சென்ற 1,300 பேர் உயிரிழப்பு!

ஹஜ் யாத்திரை

Follow Us On

ஹஜ் யாத்திரை சென்ற 1,300 பேர் உயிரிழப்பு: இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்று ஹஜ். ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சவூ அரேபியாவின் மக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வருகை தருகிறார்கள். இந்தியாவில் தனியார் பயண நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் இந்தியா ஹஜ் கமிட்டி ஹஜ் பயணத்துக்கு மக்களை அழைத்து சென்று வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹஜ் யாத்திரையின்போது 1,300 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜெல் கூறுகையில், “அதீத வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 1300 பேர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புகளில் 83 சதவீதம் பேர் மெக்காவில் உயிரிழந்துள்ளனர். 95 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் தலைநகர் ரியாத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

Also Read: ஆடிப்போன ஜப்பான்.. 2 நாளில் உயிரைப் பறிக்கும் மர்ம நோய்.. பீதியில் உலக நாடுகள்!

இறந்த யாத்ரீகர்கள் பலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால், அடையாளம் காணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் மெக்காவில் புதைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 660க்கும் மேற்பட்ட எகிப்தியர்களும் அடங்குவர். அவர்களில் 31 பேரைத் தவிர மற்ற அனைவரும் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள்” என்றார். மேலும், அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குச் செல்ல உதவிய 16 பயண நிறுவனங்களின் உரிமங்களை எகிப்து ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எகிப்து இந்த ஆண்டு 50,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட யாத்ரீகர்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், ஜோர்டான், துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து டஜன் கணக்கானவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இரண்டு பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், 10 சதவீத பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக சவுதி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வட கொரிய அதிபரை காரில் அழைத்துச் சென்ற ரஷ்ய அதிபர் புதின்.. வைரல் வீடியோ..!

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version