Heatwave Death: மெக்காவில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு.. ஹஜ் பயணத்தில் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு..! - Tamil News | | TV9 Tamil

Heatwave Death: மெக்காவில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு.. ஹஜ் பயணத்தில் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு..!

Published: 

20 Jun 2024 15:54 PM

Hajj Pilgrims Death: இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 645 பயணிகள் உயிரிழந்ததாக அங்கிருக்கும் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்பநிலை காரணத்தால் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் , 323 பேர் எகிப்தியர்கள் என்றும் 68 பேர் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், 68 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் அதில் பெரும்பாலானோர் முதியவர்கள் என தெரிவித்துள்ளார். சுமார் 2,000 த்துக்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heatwave Death: மெக்காவில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு.. ஹஜ் பயணத்தில் பலி எண்ணிக்கை 645 ஆக உயர்வு..!

ஹஜ் - மெக்கா (மாதிரி புகைப்படம்)

Follow Us On

ஹஜ் பயணிகள் உயிரிழப்பு:  இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 645 பயணிகள் உயிரிழந்ததாக அங்கிருக்கும் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்பநிலை காரணத்தால் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் , 323 பேர் எகிப்தியர்கள் என்றும் 68 பேர் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், 68 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் அதில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும், பலர் இயற்கையான காரணங்களுக்காகவே உயிரிழந்துள்ளதாகவும், சிலர் கடுமையான வெப்பநிலை காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜஹ் பயணம் மேற்கொண்ட பல இந்தியர்களை காணவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக மெக்காவில் இருக்கும் ஹஜ் கருதப்படுகிறது. ஒவ்வொரு இஸ்லாமியர்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெக்காவில் கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வரை 550 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 645 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read: உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வரம்பு.. பாட்னா உயர்நீதிமன்ம் அதிர்ச்சி தீர்ப்பு!

உயிரிழந்த 645 பேரில் 323 எகிப்தியர்களும், 60 ஜோர்டானியர்களும், 68 இந்தியர்களும், 30-க்கும் மேற்பட்ட துனிசியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர். தினசரி நூற்றுக்கணக்கானோருக்கு, வெப்பத்தால் ஏற்படும் சோர்வுக்காக மசூதி வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெக்காவில் பல சடங்குகள் திறந்தவெளி மற்றும் கால்நடையாக செய்யப்படுகின்றன. இது பக்தர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு சுமார் 2,000 த்துக்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக முன்பதிவு செய்யாத பயணிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமையன்று சவுதியில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதிகப்படியான வெப்பநிலை காரணமாக அங்கு வெப்ப அலையும் வீசுகிறது. ஒவ்வொரு தசாப்தத்திலும் சவுதி அரேபியாவின் வெப்பநிலை 0.4 C அதிகரித்து வருவதாகவும், மோசமான வெப்பநிலையை கையாள அங்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பல தரப்பு கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

Also Read: 8 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version