Yahya Sinwar : ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேல்.. யார் இந்த யாஹ்யா சின்வார்? - Tamil News | Hamas Leader Yahya Sinwar killed in Israel missile attack on Gaza | TV9 Tamil

Yahya Sinwar : ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேல்.. யார் இந்த யாஹ்யா சின்வார்?

Hamaz Leader Killed | கடந்த அகடோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1,139 மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி 251 இஸ்ரேலியர்களை பணைய கைதிகளாகவும் ஹமாஸ் கடத்திச் சென்றது.

Yahya Sinwar : ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேல்.. யார் இந்த யாஹ்யா சின்வார்?

யாஹ்யா சின்வார்

Updated On: 

18 Oct 2024 10:29 AM

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக கடும் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் தலைவரும், அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதலின் முக்கிய புள்ளியுமான யாஹ்யாவை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதாவது வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் சிக்கி, புழுதியில் அமர்ந்துக்கொண்டிருக்கும் அவரது கடைசி ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்திய ஹமாஸ்

கடந்த அகடோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1,139 மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி 251 இஸ்ரேலியர்களை பணைய கைதிகளாகவும் ஹமாஸ் கடத்திச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது. அதன்படி, கடந்த ஒரு ஆண்டுகாலமாக இந்த போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் இந்த பதிலடி தாக்குதலில் காசாவில் இதுவரை சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்… ரசிகர்கள் வேதனை

காசாவில் கடந்த ஒரு  ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த போரால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து உள்ளது. காசா மக்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரிக்கை வைத்த நிலையிலும், இஸ்ரேல் போரை நிறுத்திய பாடில்லை. அதன் ஒரு படியாக, காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தி ஹமாஸ் தலைவரை கொலை செய்துள்ளது இஸ்ரேல்.

இதையும் படிங்க : Rishabh Pant: அறுவை சிகிச்சை செய்த அதே கால்.. வலியுடன் வெளியேறிய ரிஷப் பண்ட்!

யார் இந்த ஹமாஸ் தலைவர் “யாஹ்யா சின்வார்”?

யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஆவார். இவர் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இதனை தொடர்ந்து அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய போரால் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், தனது படைகள் மற்றும் கருவிகளை வைத்து யாஹ்யா சின்வாரை மிக தீவிரமாக தேடி வந்தது. சின்வாரோ கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது பாதுகாவலர்களுடன் காசாவில் பூமிக்கு அடியில் பதுங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்திருக்கிறார். தான் இருக்கும் இடம் இஸ்ரேலுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காக அவர் இத்தகைய தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : Miss India 2024 Winner: மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித் தூக்கிய நிகிதா போர்வால்… யார் இந்த பேரழகி?

இந்த நிலையில்தான் ஹமாஸில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸின் ஒரு கட்டிடத்தில் கண்டுக்கப்பட்ட யாஹியா சின்வாரின் உடலை, அவரது பற்கள் மற்றும் கைரேகையை கொண்டு இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல், யாஹியா சின்வார் தளபதி, அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது என்று கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?