காசாவை நிலைகுலைய வைத்த வான்வழி தாக்குதல்… சர்வ நாசமாக்கிய இஸ்ரேல் பாதுகாப்பு படை.. என்னாச்சு? - Tamil News | | TV9 Tamil

காசாவை நிலைகுலைய வைத்த வான்வழி தாக்குதல்… சர்வ நாசமாக்கிய இஸ்ரேல் பாதுகாப்பு படை.. என்னாச்சு?

Updated On: 

15 Jul 2024 08:40 AM

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. . இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. மேற்கு காசாவில் நடத்தி வான்வழி தாக்குதலில் சுமார் 141 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவை நிலைகுலைய வைத்த வான்வழி தாக்குதல்... சர்வ நாசமாக்கிய இஸ்ரேல் பாதுகாப்பு படை.. என்னாச்சு?

காசா

Follow Us On

காசாவில் ஒரே நாளில் 141 பேர் பலி: இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. மேற்கு காசாவில் நடத்தி வான்வழி தாக்குதலில் சுமார் 141 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 400 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரின் மேற்கில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பிரார்த்தனை கூடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காசா குற்றச்சாட்டியது.

ஆனால், ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவரது உதவியாளரைக் கொல்லும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,584 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 88,800 பேர் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: டிரம்பை சுட்டது யார்? அமெரிக்காவை பதறவைத்த மர்ம நபர்!

10 மாதங்களாக நீடிக்கும் போர்:

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகியது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்த பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை மீட்க இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் முயற்சித்து வருவதாக தெரிகிறது. காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் அமைப்பு மறுத்து வரும் நிலையில், காசா-எகிப்து எல்லையான ரஃபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவது தன் வசத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால், இஸ்ரேல் தனது போரை நீடிப்பதாக அறிவித்திருக்கிறது.

ஐ.நா. அதிர்ச்சி தகவல்:

இந்த போரினால் காசாவில் சுமார் 5 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. கூறியுள்ளது. காசாவில் பஞ்சத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுமார் 4.95 லட்சம் பாலஸ்தீனர்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேபோல, 7.4 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பு அவசரநிலையில் உள்ளனர். போர் காரணமாக சர்வதேச நாடுகள் அனுப்பும் உதவி காசாவுக்கு செல்லவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

Also Read: என்னை 2 முறை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது.. எலான் மக்ஸ் பகீர் தகவல்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version