5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nobel Prize: இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற தென் கொரிய பெண்.. யார் இவர்?

நோபல் பரிசு: 2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் பரிசு அகாடமி அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று நோபல் பரிசு அகாடமி அறிவித்துள்ளது.

Nobel Prize: இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற தென் கொரிய பெண்.. யார் இவர்?
நோபல் பரிசு வென்ற தென்கொரிய பெண் (picture credit: Twitter/@NobelPrize)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Oct 2024 17:46 PM

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் பரிசு அகாடமி அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அதில், “வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு:

அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது,  2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது.

Also Read: 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.. என்ன காரணம் தெரியுமா?

யார் இந்த தென்கொரிய பெண்?

1970 ஆம் ஆண்டு தென் கொரிய நகரமான குவாங்ஜூவில் பிறந்தவர் ஹான் காங். தனது ஒன்பது வயதில் தனது குடும்பத்துடன் சியோலுக்குச் குடிப்பெயர்ந்தார். இவர் இலக்கிய பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தந்தையே போலவே பெண் ஹான் காங்க்கும் சிறுவயதில் இருந்தே எழுத்து மீது மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

இவர் எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் இயங்கி வருகிறார்.இவர் முதலில் இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995ஆம் ஆண்டு ’லப் ஆஃப் யோசு’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

இதன்பிறகு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகள் வெளியிட்டார். இதன்பிறகு 2007ஆம் ஆண்டு ‘தி வெஜிடேரியன்’ என்ற நாவலை எழுதினார்.  இந்த நாவல் சர்வதேச அளவில் ஹன் கங்குக்கு புகழை தேடி தந்தது. வழக்கமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்று கொள்ள மறுக்கும் கதாநாயகன் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளை பேசியது இந்த நாவல்.

இறைச்சியை உண்ண மறுப்பதால் மோசமான வன்முறைகளை சந்திக்கிறது அந்த கதாபாத்திரம்இதுபோன்ற பல நாவல்கள், சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றர் ஹான் காங். இந்த நிலையில், தற்போது இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

முன்னதாக நேற்று, 2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்  அறிவித்துள்ளது. அதன்படி டேவிட் பேக்கர்,  டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூன்று பேருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதில் டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது. அதேபோல் புரத அமைப்புகளை அதன் அமினோ அமில வரிசையிலிருந்து கணித்ததற்காக டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Also Read: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்ற இருவர்.. எதற்காக தெரியுமா?

இந்த நோபல் பரிசு புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1895 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், 1901 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக நோபல் பரிசு முதல்முறையாக வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல் நினைவுத் தினம் அன்று வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News