Srilanka PM: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்.. யார் இந்த ஹரிணி அமரசூரிய?
PM Harini Amarasuriya: இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராவார். அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராவார். பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதலாவது பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சத்தி கூட்டணியின் அனுரா குமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். இதனை அடுத்து, அவர் நேற்று நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சியின் ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Sri Lankan President appoints Harini Amarasuriya as PM, third woman to hold post
Read @ANI Story | https://t.co/b89oLKBXSf#SriLanka #HarineAmarasuriya #AnuraKumaraDissanayake pic.twitter.com/v1IelWOpKR
— ANI Digital (@ani_digital) September 24, 2024
யார் இந்த ஹரிணி அமரசூரிய?
ஹரிணி அமரசூரிய 1970ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி பிறந்தார். 2020ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்ப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான இவர், நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடுகள் ஆகிய அமைச்சுப் பதவிகளையும் வகித்து வருகிறார்.
இவர் அரசியலுக்குள் நுழைவதற்கு முன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகக் கற்கைகளுக்கான மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் கருத்தியல் ரீதியாக இடதுசாரியாக விளங்குகிறார். இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தை பாதுகாப்பு, இலங்கை கல்வி முறை ஆகியவை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மேலும், பாலின சமத்துவமின்மை, பெண்கள் உரிமை மீறல்கள் போன்ற பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியர். பாலினம், வளர்ச்சி, மாநில சமுதாய உறவுகள், குழந்தை பாதுகாப்பு, உலகமயமாக்கல் மற்றும் மேம்பாடு பற்றிய ஆராய்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
Also Read: சர்வ நாசம்.. 182 பேர் மரணம்.. லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்!
இந்த நிலையில், இவர் இலங்கையின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் இலங்கையின் 16-ஆவது பிரதமராக உள்ளார். மேலும், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராகவும் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோர் இலங்கையின் பிரதமர் பதவியை அலகரித்தனர் என்து குறிப்பிடத்தக்கது.