Israel Hezbollah War: மத்திய கிழக்கில் பதற்றம்.. ஹிஸ்புல்லா தலைவர் மரணம்… போட்டு தள்ளிய இஸ்ரேல்!
Hassan Nasrallah: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம் அடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம் அடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நஸரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஹசன் நஸரல்லா நிலை குறித்த ஹிஸ்புல்லா அமைப்பினரின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
Hassan Nasrallah will no longer be able to terrorize the world.
— Israel Defense Forces (@IDF) September 28, 2024
லெபனான் – இஸ்ரேல் போர்:
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக அரங்கேறி வருகிறது. மறுபுறம் இஸ்ரேல் ஹில்புல்லா இடையேயான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சேமிப்பு சாதனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குழந்தைகள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்கவிட்டாலும் இத்தகைய உயர் தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும், எதிர் நடவடிக்கையாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் இரு தரப்பினரையும் முழு போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லெபானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் இருதரப்பினரும் உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கோரிக்கையும் விடுத்தனர். ஆனால், இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் மரணம்
இதோடு இல்லாமல் இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நாவில் நேற்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இப்படியான சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம் அடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நஸரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருதப்படும் கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக தெற்கு பெய்ரூட்டில் நேற்று இரவு முழுவதும் விமானம் மூலம் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் கொல்லப்பட்டார். 68 வயதான நஸ்ரல்லாவுக்கு இஸ்லாமியர்கள் மத்திய பெரும் ஆதரவு உள்ளது. லெபனானில் மகத்தான அதிகாரத்தை வைத்திருக்கும் நஸ்ரல்லா, போரை நிறுவதற்கான திறன் கொண்ட ஒரே நபராக கருதப்படுகிறார். மேலும் நஸ்ரல்லாவின் மகனும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: 24 மணி நேரத்தில் விசா.. இனி இலங்கைக்கு ஈஸியா செல்லலாம்!
இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்:
நேற்று ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹில்புல்லாக்களுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வருகிறது. ஆனால், அவர்களின் தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய இஸ்ரேலியர்கள் மீண்டும் வீடு திரும்பும்வரை நாங்கள் ஓயமாட்டோம். ஹில்புல்லா போன்ற நிழல் படைகளை கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான், எங்களிடம் இருந்து தப்ப முடியாது. ஈரானின் எந்த பகுதியையும் எங்களால் எளிதில் அடைய முடியும்” என்று திட்டவட்டமாக கூறினார்.