Israel: ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.. 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி - Tamil News | Hezbollah Organization drone attack 4 Israeli soldiers died and several people injured | TV9 Tamil

Israel: ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.. 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி

ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “நேற்று, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ராணுவ தளத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குடும்பங்களின் துயரத்தில் பாதுகாப்பு படை பங்கு கொள்கிறது என தெரிவித்துள்ளது.

Israel: ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.. 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Oct 2024 11:45 AM

இஸ்ரேல் ராணுவம்: ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “நேற்று, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ராணுவ தளத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குடும்பங்களின் துயரத்தில் பாதுகாப்பு படை பங்கு கொள்கிறது. மேலும் அவர்களுடன் தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம். வதந்திகள் மற்றும் காயமடைந்த நபர்களின் பெயர்களைப் பரப்புவதைத் தவிர்த்து அவர்களின் குடும்பங்களுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலானது சரியாக லெபனான் எல்லையில் இருந்து 40 மைல் தொலைவில் அமைந்துள்ள டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள பின்யாமினா நகருக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 61 பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையையும் செய்யாமல் ட்ரோன் எப்படி இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் டெல் அவிவ் நகரத்தில் வான் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு அமெரிக்க பாதுகாப்பு படையின் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை அனுப்புவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Driverless Cybercab: டிரைவரே கிடையாது… விரையில் அறிமுகமாகும் ரோபோ டாக்ஸி.. சிறப்பம்சங்கள் என்ன?

தொடரும் போர் பதற்றம் 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனையை நிர்வகித்து வந்த  ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம் ஹமாஸ் சமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ஈரான் அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

Also Read: Railway Bridges: எல்லாமே பிரம்மாண்டம்.. இந்தியாவின் பிரமிப்பூட்டும் ரயில் பாலங்கள் லிஸ்ட்!

இதனுடைய கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி இஸ்ரேல் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. கடந்தாண்டு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, துணைத் தலைவர் நபில் ஹௌக் ஆகியோர் கொலைக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஈரான் மண்ணில் நடந்த இந்த படுகொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என வெளிப்படையாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

இப்படியான நிலையில் தான் எதிர்பாராத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் களம் கண்டுள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தங்கள் படைகளையும், ஆயுதங்களையும் வழங்கி உதவி செய்து வருகிறது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மொபைல் போன்களைத் தவிர்த்து பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானத்தில் எடுத்து செல்ல கூடாது என்று ஈரான் அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?