படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம் தான்.. விசா பெற புது ரூல்ஸ்! - Tamil News | | TV9 Tamil

படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம் தான்.. விசா பெற புது ரூல்ஸ்!

Updated On: 

09 May 2024 16:59 PM

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா முறையில் சில கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா விதித்துள்ளது.

படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம் தான்.. விசா பெற புது ரூல்ஸ்!
Follow Us On

ஆஸ்திரேலியா விசாவுக்கு கட்டுப்பாடு:

கல்வி கற்கவும், வேலைவாய்ப்புக்காவும் இந்தியாவில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்தியர்கள் தங்கி படித்தும், வேலை பார்த்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிப்பிற்காக விசா பெறுவதில் சில மாற்றங்களை ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. அதாவது, மாணவர் விசா பெற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர் தங்களது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் மாணவர் விசா கிடைக்காது. இந்த தொகையை தான் தற்போது ஆஸ்திரேலியா உயர்த்தி உள்ளது. அதன்படி, ஊதியத்தில் சுமார் 75 சதவீத தொகையை ஆஸ்திரேலியாவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

Also Read : இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து!

மாணவர் விசா பெறுவதில் சிக்கல்:

நாளை முதல் விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் 75 சதவித தொகை வைக்க வேண்டும். அதாவது, வெளிநாட்டு மாணவர்கள் 29,710 அமெரிக்க டாலரை தங்களது வங்கிக் கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.

அப்போது தான் ஆஸ்திரேலியா செல்ல மாணவர் விசா பெற முடியும். கடந்த 7 மாதங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேமிப்பு தொகை 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேமிப்பு தொகை ரூ.11,54,361 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.13,44,405 ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

காரணம்:

கடந்த 2022ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு ஏராளமான வெளிநாட்டு மாணவர்ள் வந்தனர். இதனால், வாடகை வீடுகள் என அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது.

மேலும், மாணவர்கள் படிக்கும் காலத்தை தாண்டி அங்கு சட்டவிரோதமாக தங்குவதை தடுக்க இதுபோன்ற கட்டுப்பாடுகளை அஸ்திரேலியா அரசு அமல்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு ஜூலையில் 6,54,870 ஆக உயர்ந்துள்ளது. இந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : “ஆணுறை அணியாமல் பாலுறவு வைத்தார்” டிரம்ப் குறித்து நடிகை பரபர வாக்குமூலம்!

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version