ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன? - Tamil News | Human hunting behind the giant mammals extinction | TV9 Tamil

ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன?

Updated On: 

04 Jul 2024 16:26 PM

Animal Extinction | கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு 57 வகை பெரிய பாலூட்டி விலங்குகள் இருந்ததாகவும் தற்போது வெறும் 11 வகைகள் மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பெரிய வகை விலங்குகள் காலநிலை மற்றும் சூழல் மாற்றத்தால் அழிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவை, மனித தலையிடலால் அழிந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன?

மாதிரி புகைப்படம்

Follow Us On

ராட்சத விலங்குகள் : உலகில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய வகை பாலூட்டிகளில் சுமார் 57 இனங்கள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அவை பூமியில் வாழும் ராட்சத பாலுட்டிகளாக விளங்கின. ஆனால் அவை காலநிலை மற்றும் சுற்றுசூழல் மாற்றத்தால் முழுவதுமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவை காலநிலை மாற்றத்தாலோ சுற்றுசூழல் மாற்றத்தாலோ அழியவில்லை என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மனிதர்கள் வேட்டையாடிதன் காரணமாக அவை அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. உண்மையில் பெரிய வகை விலங்குகள் காலநிலை மாற்றத்தால் தான் அழிந்துவிட்டனவா அல்லது மனித தலையிடல் தான் காரணமா விரிவாக பார்க்கலாம்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரிய பாலூட்டிகள் 

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 57 வகை பெரிய பாலூட்டிகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் தற்போது வெறும் 11 வகை விலங்குகள் மட்டும் தான் மீதமுள்ளன. இந்த 11 வகை உயிரினங்களும் தற்போது மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் முழுவதுமாக அழிந்துபோகவில்லை. ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டேனிஷ் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் இயக்கவியல் மையத்தின் அறிக்கையில், இந்த மறைந்துப்போன உயிரினங்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமா?

ப்ளீஸ்டோசீனின் பிற்பகுதியில் (130000 முதல் 11000 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்பட்ட காலநிலை மாற்றம் உலகில் இருந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை கடுமையாக பாதித்தன. அதில் பெரிய வகை  உயிரினங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. பனிப்பாறைகள் உருகியபோதும் அவை இந்த பெரிய வகை உயிரினங்களை தாக்கவில்லை. இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜென்ஸ் கிறிஸ்டியன் ஸ்வெனிங் கூறுகையில், சமீபத்திய பெரிய உயிரினங்களின் அழிவுகள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை. ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது காலநிலை மாற்றமில்லை என்கிறார்.

இதையும் படிங்க : Health Tips : மோசமான தூக்கம்.. பசியின்மை.. மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள்!

பெரிய வகை விலங்குகள் அழிய மனிதர்களே காரணம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்குகளுக்கான பொறிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அது பண்டைய காலத்தில் மனிதர்கள் பெரிய விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டனர் என்பதற்கு சான்று. மனித எலும்புகள் மற்றும் ஈட்டி புள்ளிகளின் ஐசோடோப் பகுப்பாய்வு அவை மிகப்பெரிய பாலூட்டிகளாக இருக்கும் என்பதை குறிக்கிறது. ஆரம்ப கால மனிதர்கள் திறமையாக வேட்டையாடுவார்கள். அதனால் அவர்களால் பெரிய விலங்குகளை எளிதாக வேட்டையாட முடிந்தது. இந்த பெரிய வகை விலங்குகள் நீண்ட கர்ப்ப காலம் மற்றும் மெதுவாக முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டவை. எனவே அவை இயற்கையாக அழிந்துப்போக நீண்ட நாட்கள் ஆகியிருக்கும். எனவே மனிதர்களின் வேட்டையால் தான் இந்த உயிரினங்கள் அழிந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version