Donald Trump : கமலா ஹாரிஸுடன் இனி நான் விவாதம் நடத்த மாட்டேன்.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்! - Tamil News | I will not debate again with Kamala Harris before November 5 says Donald Trump | TV9 Tamil

Donald Trump : கமலா ஹாரிஸுடன் இனி நான் விவாதம் நடத்த மாட்டேன்.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

Published: 

13 Sep 2024 12:10 PM

Debate | அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு தனித்தனியாக பிரசாரம் செய்து வந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் விவாதம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் விவாதம் நடத்தினர். 

Donald Trump : கமலா ஹாரிஸுடன் இனி நான் விவாதம் நடத்த மாட்டேன்.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ( PTI Photo )

Follow Us On

அமெரிக்க அதிபர் தேர்தல் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் நேரடி விவாதம் நடத்தினர். இந்த விவாதத்தை தொடர்ந்து இனி தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் நடத்தப்போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். விவாதத்திற்கு பிறகு என்ன நடந்தது, டொனால்ட் டிரம்ப் அப்படி அறிவித்ததற்கான காரணம் என்ன என விரிவாக பார்க்கலாம்.

நேருக்கு நேர் விவாதம் நடத்திய வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு தனித்தனியாக பிரசாரம் செய்து வந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் விவாதம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் விவாதம் நடத்தினர்.

இதையும் படிங்க : Shane Warne Birthday: விக்டோரியா மண்ணின் மைந்தன் டூ ஸ்பின் மன்னன்.. ஷேன் வார்னே கிரிக்கெட்டை ஆண்ட கதை!

அப்போது பேசிய கமலா ஹாரிஸ், நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன. பணக்காரர்களுக்கு மட்டுமே டிரம்ப் வரிசலுகை கொடுத்ததால் டிரம்ப் ஆட்சியிலிருந்து செல்லும்போது வேலைவாய்ப்பின்மை மோசமாக இருந்தது.  டிரம்ப் ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்யவே நான்கு ஆண்டுகளாகிவிட்டது. டிரம்பின் ப்ராஜெக்ட் 2025 திட்டம் மிகவும் ஆபத்தானது, மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.

21 ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும். சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது,  பெண்களின் உடல் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவை. டிரம்ப் மக்களின் பிரச்சினைகள், கனவுகள் பற்றி பேசவே மாட்டார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

கமலா ஹாரிஸுக்கு பதில் அளித்து பேசிய டிரம்ப்

இதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இங்கு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  அமெரிக்காவை உலகின் சிறந்த பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சீன பொருட்கள் மீது வரிகளை சுமத்தி அரசுக்கு வருவாய் ஈட்டினோம். எனக்கும் ப்ராஜெக்ட் 2025 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றை மிகச் சிறப்பாக கையாண்டோம். என்னுடைய ஆட்சியில் பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்தது, பைடன் ஆட்சியில் பண வீக்கத்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் அவரிடம் எந்த திட்டமும் இல்லை.

மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை கூறியவர்கள் ஜனநாயக கட்சியினர். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். வங்கி கடன் ரத்து என மாணவர்களை பைடன் ஏமாற்றினார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. எனது பிரசார கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இனி 3வது விவாதம் கிடையாது – டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

இந்த நிலையில் இனி கமலா ஹாரிஸுடன் விவாதம் நடத்தப்போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போட்டியில் தோற்றவர்கள் எப்போதுமே மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பார்கள். கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற விவாதத்தில் நான் வெற்றி பெற்றதாக தரவுகள் தெளிவாக கூறுகின்றன. இதனால் கமலா ஹாரிஸ் இரண்டாவது விவாதத்திற்கு அழைக்கின்றார். கமலா ஹாரிஸும் ஜோபை பைடனும் நாட்டை அழித்துவிட்டனர். குற்றவாளிகளை நாட்டிற்கு அனுமதித்து நாட்டின் வளர்ச்சியையும் பண வீக்கத்தையும் பாதிப்படைய செய்துள்ளனர். இவை அனைத்தும் கமலா ஹாரிஸ் மற்றும்  ஜோ பைடனால் தான் நடைபெற்றது. இது நான் ஜோ பைடன் உடன் நடத்திய முதல் விவாதம் மற்றும் கமலா உடன் நடத்திய 2வது விவாதம் ஆகியவற்றின் மூலம் தெளிவாக புரிந்திருக்கும். கடந்த 4 ஆண்டுகளாக என்ன செய்தோம் என்பதை கமலா ஹாரிஸ் நினைத்துப்பார்க்க வேண்டும். இனி 3வது விவாதம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version