Donald Trump : வெற்றி பெறவில்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.. டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!
Donald Trump | அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக தற்போது துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை அவர் பெற்றார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேரதலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஒருவேளை தான் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் இனி தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க தேர்தல் களத்தில் தற்போது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது, டிரம்ப் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Lebanon Attack: சர்வ நாசம்.. 182 பேர் மரணம்.. லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்!
தீவிரம் எடுக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக தற்போது துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை அவர் பெற்றார். வயது மூப்பு மற்றும் நிதானமற்று இருப்பதாலும் அவருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. இந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனை தொடர்ந்து கமலா ஹாரிஸை அவர் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். பைடனின் பரிந்துரையின் படியே கமலா ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
டிரம் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையே நிலவும் கடும் போட்டி
இந்த நிலையில் டிரம் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் நேரடி விவாதம் நடத்தினர். இந்த விவாதம் டிரம்புக்கு ஆதரவாக அமைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இரண்டாவது விவாதம் நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். ஆனால் அதற்கு பதில் அளித்த டிரம்ப் கமலா உடன் இனி மீண்டும் விவாதம் நடத்த மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதகிடையெ கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலா ஹாரிஸ் மீண்டும் டிரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் விவாதத்திற்கு அவர் டிரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!
இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – டிரம்ப் பரபரப்பு தகவல்
இவ்வாறு இரு துருவங்களாக கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது இதுவே கடைசி முறை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், ஒருவேளை நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், மீண்டும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இந்த முறை நான் நிச்சயம் தேர்தலில் வெள்வேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!
அமெரிக்காவில் ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலை உள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.