India Canada Conflict : ”ஆதாரம் இல்லை” ஹர்தீப் சிங் கொலையில் பின்வாங்கிய கனடா.. இந்தியா எடுத்த அதிரடி மூவ்! - Tamil News | india Canada row justin trudeu admits canada has only intel no evidence in nijjar killing india reacts tamil news | TV9 Tamil

India Canada Conflict : ”ஆதாரம் இல்லை” ஹர்தீப் சிங் கொலையில் பின்வாங்கிய கனடா.. இந்தியா எடுத்த அதிரடி மூவ்!

கனடா மற்றும் இந்தியா என இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது இந்த குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது என்றும் ஆதாரம் இல்லை என்றும் அதிரடி கருத்தை கூறியிருக்கிறார். 

India Canada Conflict : ”ஆதாரம் இல்லை ஹர்தீப் சிங் கொலையில் பின்வாங்கிய கனடா.. இந்தியா எடுத்த அதிரடி மூவ்!

கனடா பிரதமர் - இந்திய பிரதமர் (image credit: PTI)

Updated On: 

17 Oct 2024 14:26 PM

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது இந்த குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது என்றும் ஆதாரம் இல்லை என்றும் அதிரடி கருத்தை கூறியிருக்கிறார்.  கனடா மற்றும் இந்தியா என இருநாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா – கனடா உறவு

இந்த சம்பவம் இருநாட்டுகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே குற்றச்சாட்டி இருந்தார். இதற்கான ஆதாரத்தை வழங்க இந்தியா கோரியது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

இது விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.  ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கை விசாரித்து வரும் கனடா காவல்துறையான ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ், இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உட்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய தூதர் உள்ளிட்ட 6 தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா  இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியது.

Also Read: சடலங்களை உண்ணும் தெரு நாய்கள்.. காசாவில் தொடர் தாக்குதல்களால் பஞ்சம் ஏற்படும் அபாயம்..

பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா, கனடாவில் உள்ள இந்திய தூதரர்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி  லாவோசியில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றிருந்தார்.

அப்போது மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் ட்ரூட்டோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த அடுத்த மூன்று நாளில் நிஜ்ஜார் விவாகரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும்,  இதற்கான ஆதாரத்தை வழங்க இந்தியா கோரியது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.  இந்த சூழலில் தான்,  தற்போது இந்த குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது என்றும் ஆதார் இல்லை என்றும் கனடா கூறியுள்ளது பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.


இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாம் நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக கனடா எங்களிடம் (இந்தியாவிடம்) எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

Also Read: நெற்றிக்கு வைக்கப்பட்ட குறி.. மேடையில் இருந்து தெறித்து ஓடிய நிக் ஜோனஸ்!

இங்கிலாந்து ஆதரவு:

இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பேற்க முடியும்” என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிஜ்ஜார் கொலை விவகாரம் இந்தியா, கனடா இடையேயான உறவு சீர்குலைந்துள்ளது.

இதற்கிடையே, கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் எனறு இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கனடாவின் தனிப்பட்ட விசாரணையின் முன்னேற்றங்கள் குறீத்து நாங்கள் தகவல்களை பெற்று வருகிறோம். இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆடசிக்கு மரியாதை தருவது அவசியம். எனவே, கனடாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?