Israel Lebanon Attack: லெபனானில் உச்சக்கட்ட பதற்றம்.. ஆபத்தில் 600 ராணுவ வீரர்கள்… இந்தியா கவலை!
லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப் படையில் உள்ள 600 இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதி படை வீரர்கள் காயம் அடைந்துள்ளது பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய வீரர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப் படையில் உள்ள 600 இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகரம் கேள்வி எழுப்பியுள்ளது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதி படை வீரர்கள் காயம் அடைந்துள்ளது பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய வீரர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக அரங்கேறி வருகிறது. மறுபுறம் இஸ்ரேல் ஹில்புல்லா இடையேயான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சேமிப்பு சாதனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
லெபனானில் உச்சக்கட்ட பதற்றம்
இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், நேற்று லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி படை நிலைகள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு அமைதி படை வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையிலி, இந்தியாவுக்கு இப்போது கருத்து தெரிவித்துள்ளது.
Also Read: “போர் களத்துல பிரச்னைக்கு தீர்வு காண முடியாது” தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் பேச்சு!
அதன்படி, ஐ.நா. அமைதி படை வீரர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கவலைப்படுகிறோம் என்று கூறியது. மேலும், “நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஐ.நா. வளாகத்தின் மீறல் தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும், மேலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்தியா கவலை:
ஐ.நா. அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பையும், அவர்களின் ஆணையின் புனிதத்தையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 120-கிமீ நீலக் கோட்டில் 600 இந்தியா ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
லெபனான் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் கடந்த 1978ஆம் ஆண்டு அமைதிப் படை உருவாக்கப்பட்டது. இது யுனிஃபில் என்று அழைக்கப்படுகிறது. லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பு, 2006ஆம் ஆண்டு போர் போன்ற நிகழ்வுகளின் போது யுனிஃபிலின் இலக்குகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டன.
அப்போது அந்த அமைதிப் படை பெரும்பாலும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்த சூழலில் தான், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள 600 இந்தியா ராணுவ வீரர்கள் மீது வெளியுறவுத்துறை கவலையடைந்துள்ளது.
Also Read: அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு.. ஜப்பான் அமைப்பிற்கு அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
மேலும், ஐ.நா. அமைதி படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறுகையில், “இன்று காலை ஐ.டி.எப். மெர்காவா டாங்க், நகோராவில் உள்ள யுனிஃபில் தலைமையகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியல் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதனால் அவர்களுக்கு தீவிரமாக காயம் யாருக்கும் இல்லை” என்றது.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், காசாவில் நடக்கும் போர் மேற்கு ஆசிய முழுவதும் பரவிவிடுமோ என்ற உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் தான் கடந்த மாதம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.