India-Bangladesh Row: இந்திய கொடியை அவமதிக்கும் வங்கதேச மாணவர்கள்.. இணையத்தில் கொந்தளிக்கும் இந்தியர்கள்!

Bangladesh: வங்கதேசம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டாக்கா பல்கலைக்கழகம், நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது.

India-Bangladesh Row: இந்திய கொடியை அவமதிக்கும் வங்கதேச மாணவர்கள்.. இணையத்தில் கொந்தளிக்கும் இந்தியர்கள்!

தரையில் வரையப்பட்ட இந்திய தேசிய கொடி (Image: Social media)

Updated On: 

01 Dec 2024 14:12 PM

வங்கதேசத்தில் இந்திய தேசிய கொடியை அந்நாட்டு மாணவர்கள் அவமதித்ததால், இன்று காலை முதல் ட்விட்டர் பக்கத்தில் #bycottbangladesh என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்களைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் இந்திய கொடியின் மீது கால் வைத்து நடப்பது போலவும், மிதிப்பது போலவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் இந்தியர்கள் கொந்தெளித்து வருகின்றனர்.

ALSO READ: Telangana: தெலுங்கானா எல்லையில் பதட்டம்.. என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் உயிரிழப்பு!

இந்திய கொடி அவமதிப்பு:

வங்கதேசம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டாக்கா பல்கலைக்கழகம், நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களின் வாயில்களின் தரையில் இந்திய தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. அதேபோல், நோகாலி பல்கலைக்கழகத்தின் வாயில்களின் கீழ் இந்திய தேசிய கொடியுடன், இஸ்ரேலிய கொடியும் வரையப்பட்டுள்ளது.

அதில், மாணவர்கள் நம் நாட்டு தேசிய கொடியின் மீது கால் வைத்து நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, சமூக வலைதளங்களில் இந்தியர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மேலும், இவ்வாறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இந்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் வங்கதேச மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்ன நடந்தது..?

வங்கதேசத்தில் இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெரும் வன்முறை சம்பவங்கள் வெடிக்க தொடங்கியது. இதனால், இந்தியா – வங்கதேசம் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) ஆன்மீக தலைவரான சின்மோய் கிருஷ்ணதாஸ், தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வங்கதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தால் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து கிருஷ்ணதாஸ் தற்போது சிட்டகாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

ALSO READ: கெஜ்ரிவால் மீது தாக்குதல்… சிக்கிய பாஜக நிர்வாகி… அதிரடி காட்டிய போலீஸ்!

இது மட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது, வங்கதேசத்தில் உள்ள இந்து மக்களின் வீடுகள் எரிப்பு, ஹசாரி லேனில் உள்ள லோக்நாத் கோயில், மான்சா மாதா கோயில் மற்றும் காளி மாதா கோயில்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக வங்கதேசத்தில் நாலாபுறமும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..